வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.! திருச்சியில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தினம் தினம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடும் நபர்களை எவ்விதமான பாரபட்சமும் இன்றி தண்டிக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகேயிருக்கும் இருதயபுரம் பகுதியை சார்ந்தவர் பவுல்ராஜ்.  இவர் விவசாயியாக பணியாற்றி வரும் நிலையில்., இவரது 17 வயதுடைய மகள் அங்குள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடம் பயின்று வருகிறார். 

இந்நிலையில்., நேற்று மதியத்தின் போது இல்லத்தில் சிறுமி மட்டும் தனியாக இருந்து வந்த நிலையில்., இதே பகுதியை சார்ந்த ஜோசப் என்ற 42 வயது கொடூரன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து., மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளான். 

sexual harassment, sexual abuse, sexual torture, rapped,

வீட்டிலும் ஆட்கள் இல்லாத நிலையில் கயவனின் பிடியில் இருந்து சிறுமி தப்பிக்க முயற்சித்த நேரத்தில் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு., இது தொடர்பாக யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளான். 

வெளியே சென்றிருந்த பெற்றோர் தனது மகளின் நிலையினை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில்., தனக்கு நடந்த கொடூரத்தை சிறுமி தனது பெற்றோரிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.  

இதனையடுத்து இது தொடர்பாக பெற்றோர் அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் ஜோசப்பை கைது செய்தனர். மேலும்., ஜோசப் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வரும் நிலையில்., இவனுக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in trichy girl sexual harassment police arrest culprit


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->