எலி மருந்தை மாத்திரை என நினைத்து உண்ட சிறுமி பரிதாப பலி..! குழந்தைகள் மாத்திரை உண்ணும் சமயத்தில் கவனமாக இருங்கள்..!! - Seithipunal
Seithipunal


இல்லங்களில் இருக்கும் மாத்திரைகளை முடிந்தளவு அவசரமில்லாமல் சரியான மாத்திரைகளை சாப்பிடுங்கள்.. குழந்தைகள் கை வைத்து எடுக்கும் தொலைவில் மாத்திரைகள்., மருந்துகள் மற்றும் பூச்சி கொல்லிகள் என எதையும் வைக்காதீர்கள் என்பதற்கு இது ஒரு விழிப்புணர்வாக இருக்க வேண்டும். 

திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் அலங்காபுரம் பகுதியை சார்ந்தவர் சிராஜுதீன். இவரது மகளின் பெயர் மகபுநிஷா (வயது 13). இவர் அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். 

medicine, tablet, மாத்திரைகள்,

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திடீரென உடல் நிலையானது பாதிக்கப்பட்டதால்., பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து., மருத்துவரின் பரிந்துரைக்கு பின்னர் மருந்துகள் மற்றும் மாத்திரைகளை உண்டு வந்தார்.  

இந்த நிலையில்., கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக வீட்டில் இருந்த சிறுமி., மாத்திரைகளை உட்கொண்ட பின்னர் வாந்தி எடுத்து மயக்கமடைந்துள்ளார். இவரை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்., அவசர அவசரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

doctor, மருத்துவர்,

இவருக்கு சோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி எலி மருந்தை உட்கொண்டதாக தெரிவித்துள்ளனர். இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில்., இரண்டு நாட்கள் சிகிச்சை அளித்து., சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட நிலையில்., சிறுமியின் தந்தை அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in trichy girl died due to eat rat poison think tablet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->