மாடுகளை கடத்த புதிய யுக்தி..! கடத்தல் கும்பலின் பகீர் வாக்குமூலம்., பைசா செலவில் பல லட்சம் வசூல் பார்த்த கும்பல்.!!  - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள கருமண்டபம்., பிராட்டியூர்., தீரன் நகர் பகுதிகளில் ஏராளமான பசு மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்., அங்குள்ள மாடுகள் அனைத்தும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காணாமல் போயுள்ளன. பசு மாடுகள் ஒவ்வொன்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ளதாகவும்., தினமும் சுமார் 10 லிட்டர் பால் கொடுக்கும். 

தினமும் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிய நிலையில்., மாலை நேரத்தில் மீண்டும் மாடுகள் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாட்டின் உரிமையாளர்கள்., மாடு மேய்ந்த இடத்தில் சென்று பார்த்த சமயத்தில்., மாடுகளை கடத்தி செல்லும் சமயத்தில்., கடத்தல் கும்பலின் யுக்தியை அறிந்த அதிர்ச்சியாகியுள்ளார். 

மாடு, பசு. பசு கடத்தல்,

அங்குள்ள தீரன்நகர் பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் மாடுகளை மேய்க்க விட்டு., உரிமையாளர்கள் மறைமுகமாக கண்காணித்து இருக்கும் சமயத்தில்., சுமார் 60 வயதுடைய மதிக்கத்தக்க வயதானவர் மாட்டை கடத்தி கொண்டு இருந்தார். மேலும்., மாட்டிற்கு வாழைப்பழங்களை கொடுத்து அங்குள்ள கருவேலங்காட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார். 

பின்னர் அங்குள்ள மரத்தில் மாட்டை கட்டிவிட்டு., ஒன்றும் தெரியாதது போல வெளியே வந்துள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் முதியவரை பிடித்து மாட்டை எங்கே வைத்துள்ளாய் என்று கேட்டுள்ளனர். முள் காட்டிற்குள் மாடு கட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து முத்தையவரை அடித்து நொறுக்கினர். 

மாடு, பசு. பசு கடத்தல்,

பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து முதியவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., கடந்த சில வருடங்களாகவே மாடுகளுக்கு வாழைப்பழத்தை கொடுத்து., காட்டிற்குள் அழைத்து சென்றதும்., பின்னர் இரவு நேரத்தில் மினி லாரியின் மூலமாக சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. 

மேலும்., மாடுகளை திருடுவதற்காகவே அங்குள்ள சந்தை பகுதியில் இருக்கும் வாழைப்பழங்களை வாங்கி வந்து., பின்னர் வயல் வெளியில் இருக்கும் மாடுகளை காட்டிற்குள் அழைத்து சென்று கடத்துவதும் தொடர்ந்து அரங்கேறி வந்துள்ளது. மாடுகளை வளர்க்கும் நபர்கள் கொஞ்சம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in trichy cow kidnapped by old man


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->