ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயன்ற 16 வயது சிறுவன்..! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்களுக்கு காத்திருந்த தகவல்..!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அருகேயுள்ள வனப்பகுதியில்., மலைவாழ் மக்கள் குழந்தைகளின் படிப்பிற்க்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் அரசு தொடக்கப்பள்ளியானது செயல்பட்டு வருகின்றது. 

இந்த பள்ளியில் ஆசிரியராக சுமார் 26 வயதுடைய ஆசிரியை பணியாற்றி வருகிறார். இவர் இருக்கும் இடத்திற்கும்., பள்ளி இருக்கும் மலைக்கிராமத்திற்கும் செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததன் காரணமாக., அங்குள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த வனப்பகுதியில் 2 கிமீ நடைபயணம் செய்து தான் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. 

இந்த நிலையில்., இந்த வழியிலேயே தினமும் ஆசிரியை வந்து செல்வது வழக்கம். இதனைப்போன்று கடந்த 9 ஆம் தேதியன்று பள்ளி நிறைவு பெற்றதும்., மாலை 4 மணியளவில் வீட்டிற்கு செல்வதற்காக வனப்பகுதி வழியாக நடந்து வந்து கொண்டு இருந்துள்ளார். 

sexual harassment, sexual abuse, sexual torture, rapped,

இதனை கவனித்து கொண்டு இருந்த அதே கிராமத்தை சார்ந்த 16 வயதுடைய சிறுவன்., ஆசிரியையை வழிமறித்து பணம் மற்றும் நகைகளை பறித்துக்கொண்டு., ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளான். இவனது பிடியில் இருந்து தப்பித்த ஆசிரியை மீண்டும் மலைக்கிராமத்திற்கு வந்துள்ளார். 

அங்கு இருந்த கிராம மக்களிடம் விஷயத்தை கூறி கதறியழுத நிலையில்., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மக்கள் காவல் துறையினருக்கும் - மாவட்ட பழங்குடி நல அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். 

இந்த தகவலை அறிந்த அதிகாரிகள் மறுநாள் காலையில் மலைக்கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில்., காவல் துறையினர் ஆசிரியை மற்றும் சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சமரசம் செய்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. 

arrest, jail. police arrest,

இந்த செய்தியை அறிந்த மலைக்கிராம மக்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் துறையூர் காவல் நிலையத்திற்கு வருகை தந்து., ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயன்ற கொடூரனை கைது செய்ய வேண்டும் என்றும்., அப்பகுதியில் இருக்கும் பெண்கள் மற்றும் பள்ளியில் பயின்று வரும் பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று புகார் அளித்தனர் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. 

இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில்., குற்றத்தில் ஈடுபட்ட சிறுவன் மற்றும் பாதிக்கப்பட்ட ஆசிரியையை காவல் துரையினர் அழைத்து சமரச பேச்சு நடத்திய நிலையில்., சிறுவனின் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என்று கூறியதாகவும்., இதனை அறிந்த கிராம மக்கள் அதிகாரிகளிடம் கேட்கையில்., துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். 

மேலும்., இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறும் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் அங்குள்ள காவல் நிலையத்திற்கு முன்னர் திரண்டு., குற்றத்தில் ஈடுபட்ட சிறுவனின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்., எங்களின் கிராம பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in trichy boy rap attempt school teacher police investigation going on


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->