நிஜ போலீஸ் போல வசூல் வேட்டை.. ரோந்து காவல் துறையிடம் சிக்காமல் இருக்க எடுத்த முயற்சி விபரீதத்தில் முடித்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகேயுள்ள பகுதியில், காவல்துறை அதிகாரி போல நடித்து வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது. மேலும், இவர் உண்மையான காவல்துறையினரிடம் சிக்கி தப்பிக்கும் முயற்சியில் விபத்தில் உயிரிழந்துள்ளார். 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கள்ளிமேட்டு பகுதியை சார்ந்தவர் அஜித்குமார். இவர் தன்னை காவல்துறை உதவி ஆய்வாளர் போல சீருடை அணிந்து பாவனை காட்டி, அங்குள்ள வேலம்பாளையம் பகுதியில் வாகனத்தை இடைமறித்து சோதனை செய்து வந்துள்ளார். 

மேலும், வாகன ஓட்டிகளிடம் இருந்து பணமும் வசூலித்து வந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் உண்மையான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 

இவர்களை கண்ட அஜித்குமார் தனது இரு சக்கர வாகனத்தில் அதிவேகத்துடன் தப்பி செல்ல முயற்சிக்கவே, இப்பகுதியில் சாலையின் எதிர்திசையில் வந்த லாரியில் நேருக்கு நேர் மோதி உயிரிழந்துள்ளார். 

இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in tirupur fake police died during police try to arrest


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->