மணல் கொள்ளையை தட்டி கேட்ட எஸ்.ஐ கொடூர கொலை?... கொந்தளிக்கும் கிராம மக்கள்... தூத்துக்குடியில் பேரதிர்ச்சி..!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாசார்பட்டி காவல்நிலையத்தில் சரகத்திற்கு உட்பட்ட அச்சங்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவரை சில நபர்கள் கொலை செய்ய முயற்சித்து அரிவாளுடன் துரத்தி வருவதாக காவல் துறையினருக்கு, நேற்று இரவு 11 மணிக்கு தகவல் கிடந்துள்ளது. இதனையடுத்து இங்குள்ள மேளகரந்தை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மாசார்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவசுப்பிரமணியம், தனது இரு சக்கர வாகனத்தில் அவசர அழைப்பு வந்த அச்சங்குளம் பகுதிக்கு விரைந்துள்ளார். 

இந்த நிலையில், மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் லாரியொன்று பழுதாகி சாலையோரத்தில் நின்று கொண்டு இருந்ததாகவும், இதனை கவனிக்காத காவல் உதவி ஆய்வாளர் இரு சக்கர வாகனத்தில் வேகமாக செல்கையில், லாரியின் பின்புறத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

மேலும், இவரது உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில், இவரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. இவரது அலைபேசிக்கு தொடர்பு கொண்ட நபர் யார்? யாரின் மூலமாக உதவி ஆய்வாளருக்கு தகவல் வந்தது? லாரி நின்று கொண்டு இருந்தால், இவர் கவனிக்காமல் சென்றாரா? சம்பவ இடத்திலேயே எப்படி உயிரிழந்தார்? என்பது தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது. 

இந்த காவல் நிலையத்தின் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளான கீழ்நாட்டுக்குறிச்சி மற்றும் கைலாசபுரம் பகுதியில் வைப்பாற்று மணல் திருட்டு அதிகளவு நடைபெற்று வருவதாகவும், இதனை காவல் துறையினர் கண்டித்தால் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் சம்பவம் நடைபெற்று வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தற்போது உயிரிழந்த அதிகாரி கூட மணல் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுத்து வந்த நிலையில், இவர் தற்போது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சிவசுப்பிரமணியனின் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள குருவிகுளம் தாலுகா அத்திப்பட்டி கிராமம் ஆகும். இவர் கடந்த 2011 ஆம் வருடத்தில் உதவி ஆய்வாளராக பதவியேற்ற நிலையில், தனது முதல் பணியை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி காவல் நிலையத்தில் துவங்கியுள்ளார். இவரது மனைவியின் பெயர் சுப்புலட்சுமி. இவருக்கு இரண்டரை வயதுடைய சக்தி ஸ்ரீ என்ற குழந்தை இருக்கும் நிலையில், தற்போது சுப்புலட்சுமி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவரின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thoothukudi SI murder police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->