மகளை எரித்து கொன்ற தாய்க்கு தூத்துக்குடி நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியைச் சார்ந்தவர் கோபால். இவரது மனைவியின் பெயர் ராஜேஸ்வரி. இவர்கள் இருவருக்கும் மாரிச்செல்வி என்ற மகள் இருந்தாள். 

மாரிச்செல்வி அங்குள்ள தனியார் காப்பகத்தில் பயின்று வந்த நிலையில்., மாரிச்செல்வி படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக அவ்வப்போது காப்பகத்தில் இருந்து வீட்டிற்கு வந்து சென்று வந்துள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் தாயார் அவ்வப்போது கண்டித்து காப்பகத்திற்கு அனுப்பி வைத்து வந்துள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல கடந்த 2012 ஆம் வருடம் மாரிச்செல்வி வீட்டுக்கு வந்த நிலையில்., ராஜேஸ்வரி கண்டித்து காப்பதற்கு செல்லுமாறு கூறியுள்ளார். 

thoothukudi railway station,

இதனை ஏற்க மறுத்த மாரிச்செல்வி தாயாரை எதிர்த்து பேசவே., இதனால் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி தனது மகளின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அவரின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில்., சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து தகவலை அறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு., ராஜேஸ்வரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை மகளீர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ராஜேஸ்வரியின் மீதுள்ள குற்றம் உறுதியானதால் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thoothukudi mother killed daughter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->