பெற்ற மகளை கம்பால் அடித்தே கொலை செய்த தந்தை.. மனநலம் பாதிக்கப்பட்டு அரங்கேறிய பரிதாப சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகேயுள்ள புன்னகாயல் பகுதியை சார்ந்தவர் அந்தோணி (வயது 40). இவர் மீனவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு எபிஷா என்ற மனைவியும், இரண்டு மகளும் உள்ளனர். இவரது மூத்த மகளான அந்தோனிசிடா (வயது 17), பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை எழுதி முடித்துள்ளார். 

கடந்த சில மாதமாகவே அந்தோணிக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டு இருந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வந்துள்ளார். மனநல பாதிப்பு குணமாகாததால் புளியம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அந்தோனியார் ஆலயத்தில் இருக்கும் மனநல மையமத்தில் வைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். 

கரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், அந்தோணியை சொந்த ஊருக்கு அழைத்து வந்து வீட்டில் வைத்து கவனிக்கவே, வீட்டில் யாரும் சத்தம் போட்டு பேசினாலோ அல்லது தெருவில் சத்தம் போட்டு பேசினாலோ அந்தோணி தகராறு செய்யவே, தனி அறையில் அவரை அடைத்து வைத்து பராமரித்துள்ளனர்.

இந்த நேரத்தில், அந்தோனிசிடா வீட்டில் டி.வி.பார்த்துக்கொண்டு இருக்கவே, தனியறையில் இருந்து வெளியே வந்த அந்தோணி மக்களிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மாணவி வீட்டை விட்டு வெளியே வரவே, சிறிது நேரம் கழித்து மீண்டும் டி.வி பார்க்க சென்றுள்ளார். இதன்பின்னர் அந்தோணி மகளிடம் தகராறு செய்யவே, அங்கிருந்த கம்பை எடுத்து மகளை அடித்துள்ளார். 

இதனால் மாணவி வீட்டினை விட்டுவெளியே அலறியடித்து ஓடி வரவே, சாலையிலும் வைத்து மகளை அடித்துள்ளார். இந்த தாக்குதல் மாணவி இரத்த வெள்ளத்தில் வீட்டின் முன்புறம் சரிந்து விழுந்துள்ளார். இவரை மீட்ட தாய் மற்றும் தங்கை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யவே, தூத்துக்குடி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Thoothukudi girl murder by father police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->