அரசு நிலத்தை ஆக்கிரமித்து, பட்டா வைத்திருப்பதாக சர்ச் தந்தை சரமாரி போராட்டம்.. குழிக்குள் பாய்ந்து அதிரி புதிரி அமர்க்களம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை ஊரில் அரசிற்கு சொந்தமான இடத்தில் தேவாலய நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும் அரசு சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் கட்ட எம்எல்ஏ அடிக்கல் நாட்டுவதற்கு வந்துள்ளார். 

இந்த நேரத்தில், இவர்களை தடுத்து அடிக்கல் நாட்ட விடாமல் தேவாலய நிர்வாகத்தினர் பிரச்சனை செய்துள்ளனர். புனித ஜோசப் தேவாலயம் வளாகத்திற்குள் அரசிற்கு சொந்தமான 90 சென்ட் நிலம் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் சுமார் 20 சென்ட் இடத்தில் பத்திரப்பதிவு அலுவலக கட்டிடமும் கட்ட அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

புனித ஜோசப் தேவாலயத்தை சார்ந்த நபர்கள் மொத்த இடமும் தங்களுக்கு சொந்தமான இடம் என்றும், இதில் கட்டிடம் கட்ட அனுமதிக்க முடியாது என்றும் தேவாலய தரப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும் உயர் நீதிமன்ற கிளையில் இது தொடர்பான வழக்கும் தற்போது தொடரப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரும் வருகைதந்த நிலையில், இந்த பிரச்சனை நடைபெற்றுள்ளது. 

இதில் தேவாலய பிரிவினர் தரப்பாக ஆண்கள் பெண்கள் என சுமார் 50 க்கும் மேற்பட்டோர் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் உதவியுடன் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அடிக்கல் நாட்டுவதற்காக பணியில் சிறிய அளவிலான பள்ளத்தினை ஜே.சி.பி மூலம் தோன்டிய நிலையில், அங்கு வந்த தேவாலய தந்தை அடிக்கல் நாட்ட விடாமல் தடுத்து ரகளையில் ஈடுபட்டார். 

இந்த பிரச்சனை வாக்குவாதம் என்று சென்று கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் தோண்டப்பட்ட குழியில் ஒருவர் பின்னர் ஒருவர் அமர்ந்து, பெண்களும் ஆண்களும் குழந்தை போல் அழுது அடம் பிடித்து பிரச்சனையை செய்தனர். காவல்துறையினர் எவ்வளவு முயற்சித்தும் அவர்களை அப்புறப்படுத்த இயலாத நிலையில், அடிக்கல் நாட்ட வந்து அதிகாரிகளும் எம்எல்ஏ திட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு புறப்பட்டுச் சென்றுள்ளனர். 

மேலும், அரசுக்கு சொந்தமாக இருக்கும் 90 சென்ட் நிலத்தையும் தேவாலய நிர்வாகத்தினர் வளைத்துப் போட்டுள்ளனர் என்பதும், நில அளவை விவரம் குறித்து வட்டாட்சியர் மேற்கொண்ட சோதனையில் அரசுக்கு சொந்தமான 90 சென்ட் நிலத்தில் 20 சென்ட் நிலம் உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. இதில் உரிமை கொண்டாட யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 

இதனை கேட்ட தேவாலய நிர்வாகம் இந்த இடம் நூறு வருடங்களுக்கு மேலாக தங்களது பராமரிப்பில் இருந்து வருகிறது என்றும், இந்த இடத்தின் பத்திரம் மற்றும் பட்டா தங்களின் வசம் இருப்பதாகவும் கூறி, இதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In Thoothukudi church comity occupied govt land and create problem


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->