விடுமுறைக்கான மாணவரின் உண்மையான செயலால் நெகிழ்ச்சியில் ஆசிரியர்கள்.! வைரல் பதிவு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொட்ராச்சேரி அருகேயுள்ள மேல இராதாநல்லூர் கிராமத்தை சார்ந்தவர் விஜய ராகவன். இவரது மகனின் பெயர் தீபக் (வயது 13). தீபக் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் நிலையில்., இவரின் தந்தை விஜயராகவன் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். 

தனது குடும்பத்தின் நிலையை உணர்ந்த சிறுவன்., தனது சிறு வயது முதலாகவே கல்வியில் சிறந்து விளங்கி வந்துள்ளார். இதுமட்டுமல்லாது விளையாட்டு., ஒழுக்கம் போன்ற பலவற்றிலும் சிறப்பான மாணவராக விளங்கி வருவதால்., ஆசிரியர்கள் தீபக்கை எந்த சமயத்திலும் பாராட்டிக்கொண்டும் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளனர். 

மேலும்.,  கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நிறைவு பெற்ற காலாண்டு தேர்வின் முடிவில் அணைத்து பாடத்திலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று., 90 விழுக்காட்டிற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்று வெற்றியடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். 

இந்த சமயத்தில்., தீபக் எதிர்பாராத விதமாக நேற்று பள்ளிக்கு விடுமுறை எடுத்துள்ளார். தனது விடுமுறைக்கு ஆசிரியரிடம் தகவல் தெரிவிக்க தனது விடுமுறை கடிதத்தில் "தனது ஊரில் நடைபெற்ற கபடி போட்டியினை நேற்று இரவு பார்க்க சென்றேன்.. இதனால் எனக்கு உடல் அலுப்பாக உள்ளது. எனக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்க வவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

இதனை கண்ட தீபக்கின் வகுப்பாசிரியர் தனது வகுப்பு மாணவர்களிடம் காண்பித்து., பின்னர் இது குறித்து தலைமை ஆசிரியருக்கும் தெரியப்படுத்தியுள்ளார். பின்னர் விடுமுறை முடிந்து மறுநாள் காலையில் பள்ளிக்கு வந்த தீபக்கை அனைவரும் பாராட்டி., சமூக வலைத்தளங்களில் இது குறித்து பதிவு செய்தது தற்போது வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruvarur student asks leave to say truth


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->