பள்ளி வளாகத்தில் 28 மரக்கன்றுகளை நட்டு., கஜாக்கு பிந்தைய பசுமையை விரும்பும் ஆசிரியர்கள் - மாணவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர்..!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மக்கள் எதிர்பார்க்காத அளவிற்கு., டெல்டா மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தினை சென்ற வருடம் கடந்து சென்ற கஜா புயல் தாக்கியது. இந்த புயலின் தாக்கத்தால் மக்கள் கடுமையான அளவு பாதிக்கப்பட்டு., புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மரங்கள்., வயல்வெளிகள் மற்றும் கிராம பகுதிகள் என அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. 

இதுமட்டுமல்லாது அங்குள்ள மக்கள் ஒரு வேலை உணவிற்கு தவித்த சோகத்தை பார்த்து தமிழகமே கண்ணீரில் மூழ்ங்கியது. இந்த புயலின் தாக்கத்தால் பெருமளவு மரங்கள் முற்றிலும் சேதமடைந்தது. சேதமடைந்த மரங்களை அகற்றிவிட்டு., புதிய மரக்கன்றுகளை நடும் பணியில் பல தன்னார்வ நிறுவனங்களும்., அரசும் பல முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 

திருவாரூர் புதூர் அரசு மேல்நிலைபள்ளி, திருவாரூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மரக்கன்று நடுதல்,

இந்நிலையில்., திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் திரு.ரேகா கதிர் அவர்கள்., கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு மாற்றாக புதிய மரங்களை நடவும்., கஜா புயலுக்கு முன்னதாக இருந்த பசுமை செழிப்பை மீண்டும் காண வேண்டும் என்ற ஆவலுடன் இருந்தது மட்டுமல்லாமல்., மரங்களையும் பள்ளியின் வளாகத்தில் நட முடிவு செய்தார்.

திருவாரூர் புதூர் அரசு மேல்நிலைபள்ளி, திருவாரூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மரக்கன்று நடுதல்,

இவரின் ஆசையை நிறைவேற்றும் வகையிலும்., சுற்றுப்புற சூழல் மீது ஆர்வம் கொண்ட பள்ளியின் தலைமையாசிரியர் திரு.ஜெயவிக்ரமன் தலைமையில்., அருள்நந்தவனம் அறக்கட்டளையின் நண்பர் வைத்தியநாதன் முன்னிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளியின் வளாகத்தில் 28 மரக்கன்றுகளை நட்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செஞ்சிலுவை சங்க மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruvarur puthur govt school student and teacher plant tree in school campus


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->