திருவாரூரில்., சீறிச்சென்ற தனியார் பேருந்து., ஆற்றுக்கு முத்தம் கொடுத்ததால் பரபரப்பு.! பதறிப்போன பேருந்து பயணிகள்..!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதிலும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. நொடிப்பொழுதில் உலகம் முழுவதிலும் பல்வேறு விபத்துகள் தொடர்ந்து அரங்கேறுவதாக ஆய்வறிக்கைகள் வெளியாகி பெரும் அதிர்வலையை பதிவு செய்கிறது. இதில் தமிழகத்தில் தனியார் பேருந்துகளால் அவ்வப்போது விபத்து ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளது. 

அந்தந்த மாவட்டங்களை சுற்றி இயங்கும் தனியார் பேருந்துகள் மற்றும் இளம் வயதுள்ள ஓட்டுநர்களால் அதிகளவு விபத்து ஏற்பட்டு வருகிறது. பயணத்தின் போது., பாடல்கள் இசைக்கப்பட்டு புயல் போல சீறி சென்று., முன்னே செல்லும் அரசு பேருந்திற்கு போட்டிபோட்டுக்கொண்டு விபரீத பயணத்தால் பல துயரங்களும் அரங்கேறியுள்ளது. 

accident, accident images, விபத்து, சாலை விபத்து,

தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடபாதிமங்களம் பகுதியருகே சென்று கொண்டு இருந்த தனியார் பேருந்தானது., அங்குள்ள திருநாட்டியதான்குடி அருகே சென்ற சமயத்தில் எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தானது அங்குள்ள ஆற்றில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. 

இந்த விபத்தில்., பேருந்தில் பயணம் செய்த 30 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்த நிலையில்., சிலர் மட்டும் எந்த விதமான காயமும் இன்றி தப்பினர். விபத்து ஏற்பட்டதும் பேருந்தில் இருந்த பயணிகள் அலறவே., இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கும் - அவசர ஊர்தியினருக்கும் தகவல் தெரிவித்தனர். 

வள்ளி பஸ், வள்ளி பஸ் திருவாரூர், valli bus service thiruvarur,

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., காயமடைந்தவர்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும்., இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்தாவது., இந்த குறித்த பகுதியில் விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதுமட்டுமல்லாது இவ்வாறான விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதை மேற்கொள்ளக்காட்டி., அரசு இந்த பகுதியில் சாலையினை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruvarur private valli bus jumped in river


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->