கள்ளகாதலியுடன் மது அருந்தி உல்லாசம்..! அரைபோதையில் நேர்ந்த அலங்கோல சோகம்..!! கரும்பு தோட்டத்தில் பகீர்..!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தாண்டராம்பட்டு பகுதியில் இருக்கும் கீழ்சிறுபாக்கம் பகுதியை சார்ந்தவர் பாண்டுரங்கன். இவரது மனைவியின் பெயர் ராஜேஸ்வரி. இவர் கடந்த 29 ஆம் தேதியன்று திடீரென வீட்டில் இருந்து மாயமானதை அடுத்து., இவரை காணாது தேடி அலைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களுக்கு தெரிந்த இடமெல்லாம் தேடி அழைத்துள்ளனர். 

மனைவியை எங்கு தேடியும் காணாததால்., அதிர்ச்சியடைந்த பாண்டுரங்கன் மற்றும் உறவினர்கள் இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். இந்த சமயத்தில்., அங்குள்ள இராதபுரம் கிராமத்தில் இருக்கும் ஏழுமலை என்பவரின் நிலத்தில் பெண்ணொருவரின் பிணம் இருந்துள்ளது. 

இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில்., தகவலை அறிந்ததும் சம்பவ விரைந்த காவல் துறையினர் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். இந்த விசாரணையில்., திருவண்ணாமலை அருகேயுள்ள அவலூர்பேட்டை பகுதியை சார்ந்த அஜித் முகமது என்பவன் ராஜேஸ்வரியை கொலை செய்தது தெரியவந்தது.

illegal affair, affair, couple enjoy, தாம்பத்தியம், கள்ளக்காதல், கணவன் மனைவி உல்லாசம், உல்லாசம்,

அஜித் முகம்மதை கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., ராஜேஸ்வரிக்கும் - எனக்கும் கடந்த ஐந்து வருடங்களாக தொடர்பு உள்ளது. நாங்கள் இருவரும் பழகியதன் விளைவாக நாளடைவில் கள்ளகாதல் ஏற்பட்டு., அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வருவோம். இந்த நிலையில்., சம்பவத்தன்று இருவரும் உல்லாசமாக இருந்தோம். 

இதற்கு பின்னர் நாங்கள் இருவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்த நிலையில்., எனக்கு வழங்கிய ரூ.40 ஆயிரத்தை கேட்டார். இதனால் எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஆத்திரத்தால்., ராஜேஸ்வரியை கைகளால் அடித்தேன். இதில் கீழே விழுந்த அவர் மயக்கமடைந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த பின்னர்., அவரின் உடலை கரும்பு தோட்டத்தில் வீசிவிட்டு தப்பியோடினேன் என்று தெரிவித்துள்ளான். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruvannamalai girl killed her illegal affair boy friend


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->