வெளியே மளிகை கடை., உள்ளே கருக்கலைப்பு மையம்.! திருவண்ணாமலையில் நடைபெறும் கொடூரங்கள்.!!  - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஈசானிலிங்கம் அருகேயுள்ள பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் பெண்ணின் பெயர் கவிதா. இவரது கணவனின் பெயர் பிரபு. பிரபு பி.ஏ பயின்றுள்ளார்., கவிதா பத்தாம் வகுப்பு பயின்றுள்ளார்.

இந்த நிலையில்., இவர்கள் இருவரும் மருத்துவர் என்ற பெயரில் கருக்கலைப்பு மையம் வைத்து நடத்தி வந்த நிலையில்., இவர்கள் இருவரும் போலியான நபர்கள் என்ற முத்திரையுடன் பல முறை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதனைப்போன்றே தற்போதும் இவர்கள் இருவரும் கருக்கலைப்புகளை அரங்கேற்றி வந்துள்ளனர். இந்த நிலையில்., அங்குள்ள லடாவரம் பகுதியை சார்ந்த பெண்ணின் கருவில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை பெண் என்று அப்பெண்ணின் வீட்டார் கருதியுள்ளனர். 

இதனையடுத்து இவரிடம் சென்று கருக்கலைப்பு செய்வதற்காக பெண் வந்த தகவலானது காவல் துறையினருக்கு இரகசியமாக கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சேர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை மேற்கொண்டனர். 

அந்த சமயத்தில் இவர்களின் மளிகை கடைக்குள் ஒரு படுக்கையறை கொண்ட கட்டிலில் கருக்கலைப்பிற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் போலி மருந்துகள் மற்றும் மாத்திரைகள் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் இவர்களை அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில்., இந்த இடத்திற்கு வரும் கல்லூரி பெண்கள் மற்றும் திருமணம் முடிந்த பெண்கள் என்று அனைவருக்கும் கருக்கலைப்பு செய்து வந்த நிலையில்., நாள் ஒன்றுக்கு சுமார் மூன்று பெண்கள் வீதம் தற்போது வரை சுமார் மூன்றாயிரம் முதல் நான்காயிரம் பெண்கள் வரை அனைவருக்கும் கருக்கலைப்பு செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

English Summary

in thiruvannamalai fake doctor arrested by police


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal