திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன?..!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்தி பெற்றது. மாதந்தோறும் இந்த ஆலயத்தில் திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதம் நடைபெறும் தீபத்திருவிழாவே பெரிதும் போற்றப்படுகிறது. 

தீபஜோதி வழிபாடானது, இருள்போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகளையும், இடையூறுகளையும், கிரக பாதிப்புகளால் உருவாகும் கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை.

சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளே தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் டிசம்பர் 01 அதிகாலை 5.30 மணியில் இருந்து 7.05 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. இந்த திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். மகாதீபம் கார்த்திகை தீபத் திருவிழா நாளின் (டிசம்பர்  10ஆம் தேதி) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை சார்பாக 2600 வருவது சிறப்பு பேருந்துகளும் தொடர்பு இயக்கப்பட்டு வருவதாகவும்., மொத்தமாக ஒரு நாளில் 6 ஆயிரத்து 200 பேருந்துகள் இயக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பேருந்து., கார் போன்ற வாகனங்கள் நிறுத்துவதற்கு 15 தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் 24 ஆயிரம் கார்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும்., பக்தர்கள் அவர்கள் கொண்டு வரும் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க இலவச பாதுகாப்பு மையம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரயில்வே நிர்வாகத்தின் சார்பாக 22 சிறப்பு இரயில்கள் இயக்கப்பட்டு வருவதாகவும்., ஹவுரா அதிவிரைவு வண்டி திருவண்ணாமலையில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும்., தீப திருவிழாவிற்காக பாதுகாப்பு பணிகளில் 8000 காவல்துறையினர் ஈடுபடுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruvannamalai deepa festival govt Action


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->