திருவண்ணாமலை கருக்கொலை கும்பலின் விசாரணை முழு விபரம்.! அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை பகுதியில் போலி மருத்துவர் கருக்கலைப்பில் ஈடுபடுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு இரகசிய தகவலானது கிடைத்துள்ளது. இந்த தகவலை அறிந்த காவல் துறையினர்., திருவண்ணாமலை முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்ட சமயத்தில்., அங்குள்ள ஈசான்யலிங்கம் பகுதியில் இருக்கும் பேன்சி கடையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து சந்தேகத்தை தீர்ப்பதற்கு காவல் துறையினர் சோதனை மேற்கொண்ட சமயத்தில்., கடையின் உரிமையாளர் கவிதா (வயது 32) என்ற பெண்ணிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., அவர்களுக்கு சந்தேகம் ஏற்படவே., கடையில் இருந்த பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில்., அவர் கருக்கலைப்பிற்கு வந்தது தெரியவந்தது. 

இதுமட்டுமல்லாது இவருக்கு உடந்தையாக கவிதாவின் கணவரான பிரபுவையும் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இவர்கள் இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில்., பேன்சி கடை என்ற பெயரில் கருக்கலைப்பு செய்து வந்ததும்.,  பேன்சி கடையில் இருந்த பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில்., அங்குள்ள கலசபாக்கத்தை சார்ந்த பெண் என்றும்., அவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்., மூன்றாவதாக கருத்தரித்ததால் கருக்கலைப்பு செய்ய வந்ததும் தெரியவந்தது. 

இது குறித்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில்., பேன்சி கடையின் பின் பகுதியில் மருத்துவ உபகரணங்கள்., கருக்கலைப்பிற்கு தேவையான மருந்துகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து பேன்சி கடைக்கு அதிரடியாக காவல் துறையினர் சீல் வைத்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த தகவல் பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது. 

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்., சிகிச்சைக்கு வராமல் இருந்தார். இதன் காரணமாக அவரது அலைபேசிக்கு தொடர்பு கொண்டு மேற்கொண்ட விசாரணையில்., அவர் கருக்கலைப்பு செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவர் திருவண்ணாமலையில் உள்ள கிரிவல பாதையில் கவிதா என்ற பெண்ணிடம் கருக்கலைப்பு செய்ததாக தெரிவித்துள்ளார். 

இதற்குப்பின் சம்பவ இடத்திற்கு வந்து மேற்கொண்ட விசாரணையில்., பேன்சி கடையை வைத்து உள்புறமாக கருக்கலைப்பு செய்து வந்ததும்., கருக்கலைப்பிற்கு தேவையான உபகரணங்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது. அவர்களின் அலைபேசி எண்ணை வைத்து அவர்களின் இருப்பிடத்தை கண்டறிந்த நிலையில்., எந்த விதமான சந்தேகமும் ஏற்படக்கூடாதென்று ஆட்கள் நடமாட்டம் உள்ள கிரிவல பாதையில் பேன்சி கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது. 

இந்த பேன்சி கடை என்ற கருக்கலைப்பு மையத்திற்கு நாளொன்றுக்கு சுமார் இரண்டு பெண்கள் கருக்கலைப்பு செய்ய வந்து செல்வதும்., கடந்த 10 வருடங்களாக கணவன் மற்றும் மனைவி இந்த கருக்கொலைகளை செய்து வந்ததும் தெரியவந்தது. தற்போது வரை மொத்தமாக சுமார் மூவாயிரம் முதல் நான்காயிரம் வரை கருக்கொலை செய்திருக்கலாம் என்ற தகவலும் வெளிவருகிறது. 

இதனையடுத்து முதற்கட்டமாக இவர்களின் போலி மருத்துவமனை சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில்., இவர்களின் இல்லத்திலும் சோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். ஒரு நபரிடம் கருக்கலைப்பிற்கு ரூ.12 ஆயிரம் வசூல் செய்துள்ள நிலையில்., இந்த குற்ற செயலில் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளனரா? என்ற விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார். 

மேலும்., கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கருக்கொலை செய்த ஆனந்தி மற்றும் அவரது கணவன் தமிழ்ச்செல்வன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்த நிலையில்., தற்போது அதனைப்போன்ற மற்றொரு சம்பவம் அரங்கேறியதும் வெளிச்சத்திற்கு வந்து., அங்குள்ள பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruvannamalai abortion gang arrested by police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->