ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்.. விமர்சையாக நடைபெற்ற குடமுழுக்கு.!! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் போந்தவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாட்நாச்சியம்மன் தேவி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர்..

இக்கோயிலின் சிறப்ப்பாக இக்கோவில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. இந்த திருத்தலம் மிகவும் சிதைவடைந்த நிலையில் இருந்தது. தற்போது கிராம நிர்வாகம் மற்றும் அக்கிராம பொது மக்கள் உதவியுடன் திருப்பணிகள் நடைபெற்று கோயில் புதுபிக்கபட்டு, இன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

குடமுழுக்கு அல்லது கும்பாபிஷேகம் என்பது ஒவ்வொரு கோவிலிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய ஒரு சடங்காகும். குடமுழுக்கு நடத்துவதன் மூலம் கடவுள் சிலைகளுக்கு தெய்வீகத்தன்மை புதுப்பிக்கப்படுகிறது. குடத்தில் நீர்நிரப்பி புனித ஆறுகளின் நீராக உருவகித்து மந்திரங்களினால் தெய்வத்தன்மை ஏற்றப்பட்ட நீரினால் சிலைகளும் கோபுரத்தின் உச்சியிலிருக்கும் கலசங்களும் நீராட்டப்படுவதால் இது குடமுழுக்கு என்று அழைக்கப்படுகிறது. 

கோபுர கலசங்களும் தெய்வத்தன்மை பெறுவதால் ஒருவர் கோவிலுக்குள் செல்லாமலே கோபுர தரிசனம் மூலமே கடவுளின் அருளைப் பெற இயலும் என்பது இறையாளர்களின் நம்பிக்கை.

புகைப்பட உதவி : ஹரிஷ்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruvallur nat natchiyamman kovil festival celebration


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->