குடிகார கணவனை பார்த்து மனைவி கேட்ட அந்த நாலு வார்த்தை.! ரோசம் கொண்ட குடிகார கணவன் எடுத்த விபரீத முடிவால்., நேர்ந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


நாம் வாழ்ந்து வரும் இந்த உலகமானது பல விதமான போதைக்கு உள்ளாகி பெரும் பாதிப்பை கண்டு வருகிறது., சிறுவயதுடைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை என்று பெரும்பாலானோர் போதை பொருளுக்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்து வருகின்றனர். 

அன்றைய காலத்தில் இருந்து புகை பழக்கம்., மது பழக்கம்., கஞ்சா போதை மற்றும் பல விதமான போதை பொருளுக்கு அடிமையாகி., அதனால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிந்தும்., அந்த பழக்கத்தை கை விடாமல் தங்களின் வாழ்நாட்களை இழந்து வருகின்றனர். 

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள வி.எம்.நகர் பகுதியை சார்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35). இவர் சென்னை மறைமலைநகரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவியின் பெயர் சரஸ்வதி. 

இவர் திருவள்ளூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் நிலையில்., இவர்கள் இருவருக்கும் ஐந்து வயதுடைய பெண் குழந்தை ஒன்று உள்ளது. கார்த்திகேயனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. 

இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்த நிலையில்., நேற்றிரவு வழக்கம் போல மது அருந்திவிட்டு வீட்டிற்கு கார்த்திகேயன் வருகை தந்துள்ளார். இதனை கண்ட மனைவி தனது கணவரை கண்டித்துள்ளார். 

இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து., கார்த்திகேயன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கார்த்திகேயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தி ஏற்படுத்தியுள்ளது. 

English Summary

IN THIRUVALLUR HUSBAND ATTEMPT SUICIDE HEAVY DRINK


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal