செய்வினை வசூலில், போலி சாமிகளாக பொறியியல் பட்டதாரி இளைஞர்கள்.! - Seithipunal
Seithipunal


கயவர்களால் வைக்கப்பட்ட செய்வினையை எடுப்பதாக கூறி., பொதுமக்களிடம் பணம் பறித்து வந்த பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் இருவரை திருப்பூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்வழி பகுதியை சார்ந்தவர் மகேஸ்வரன். இவரது இல்லத்திற்கு வந்த இரண்டு இளைஞர்கள் ஜோதிடர்கள் என்று கூறி அறிமுகம் செய்துள்ளனர். 

இதனை கேட்ட மகேஸ்வரன் வீட்டில் சூழ்நிலையே சரியில்லை., ஆறுதலாக இரண்டு வார்த்தை கூறினால் நன்றாக இருக்கும் என்று மனதில் எண்ணி அவர்களிடம் பேச்சு கொடுத்துள்ளார். 

இந்த நேரத்தில்., இவர்கள் இருவரும் மகேஸ்வரனின் குழந்தைக்கு அறியாத நபர் செய்வினை வைத்துள்ளதாகவும்., இதனை சரி செய்ய ரூ.4,500 ஆகும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட மகேஸ்வரனிற்கு சந்தேகம் எழுந்துள்ளது. 

இதனையடுத்து நான் பணம் தர தயார் உடனடியாக செய்வினை பிரச்சனையை சரி செய்யுங்கள் என்று கூறி., வீட்டிற்குள் சென்று பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு., காவல் துறையினருக்கு நைசாக தொடர்பு கொண்டு விஷயத்தை கூறியுள்ளார். 

தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மேற்கொண்ட விசாரணையில்., இருவரும் பொறியியல் துறை பட்டதாரிகள் என்பதும்., செய்வினை எடுப்பதாக கூறி பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக இருவரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thirupur youngster arrest fraud police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->