கணவனை அடித்து கொலை முயற்சி.. மருத்துவமனையில் நடிப்பு... அடுத்தடுத்து அரங்கேறிய சோகம்.. சிதைந்துபோன குடும்பம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சி நகரை சார்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவியின் பெயர் உமாதேவி. கணவன் - மனைவி இருவரும் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில்., வெங்கடேசனிற்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியல்லாது இருந்துள்ளது. 

இதனால் பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து ஓய்வெடுத்து வந்துள்ளார். மேலும்., வீட்டில் இருந்த வெங்கடேசன் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி., தினமும் மது அருந்தும் அளவிற்கு மதுவின் போதையில் முழ்ங்கி இருந்துள்ளார். இதனால் பணிக்கு கூட செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் படுத்துறங்கி வந்துள்ளார். 

drinks, drinking is injurious to health,

இந்த சமயத்தில்., கடந்த 17 ஆம் தேதியன்று இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார் என்று கூறி அங்குள்ள பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்., அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு., பின்னர் வெங்கடேசனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

மருத்துவர்கள் மேற்கொண்ட பிரேத பரிசோதனையின் முடிவில் வாகனத்தில் இருந்து விழுந்து வெங்கடேசனிற்கு அடிபடவில்லை என்பதும்., கட்டை போன்ற கனமான பொருளால் தாக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து இது குறித்த தகவலை காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையை துவங்கினர்.

died, murder, killed, suicide attempt,

இந்த விசாரணையில்., தனது கணவரை கட்டையால் அடித்ததாக தெரிவித்துள்ளார். மேலும்., மது பழக்கத்திற்கு ஆளான எனது கணவர் ஒரு சமயத்திற்கு மேல் பணிகளுக்கு செல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை விற்பனை செய்து மது அருந்த துவங்கினர். இது தொடர்ந்து கொண்டே வந்தது.. நான் மது அருந்த பணமில்லை என்றால் எதற்காக? வீட்டில் உள்ள பொருட்களை விற்பனை செய்கிறீர்கள் என்று சண்டையிட்டேன்..

நான் என்ன சொல்லியும் கேட்காத எனது கணவர் சம்பவத்தன்று மிக்சியை விற்பனை செய்து மது அருந்திய நிலையில்., ஆத்திரமடைந்த நான் அவரை கட்டையால் சரமாரியாக அடித்தேன். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து., விபத்தில் காயமடைந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதித்தேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து உமாதேவியை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In thirupur wife killed husband due to drinking activities


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->