குவாட்டர் பாட்டிலுடன் வேலைக்கு அழைத்த உரிமையாளர்.. பணிசெய்ய குவிந்துபோன குடிமகன்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் பின்னலாடை நிறுவனங்கள் அதிகளவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இருக்கும் பலரும் பணியாற்றி வருகின்றனர். 

மேலும், தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களை சார்ந்த நபர்களும் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். தற்போது பின்னலாடை நிறுவனத்தில் போதிய ஆட்கள் இல்லாததன் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு ஏற்றுமதி குறைந்துள்ளது. 

இந்நிலையில், திருப்பூரில் செயல்பட்டு வரும் பின்னலாடை நிறுவனத்தில் வேலைக்கு வரும் அன்பர்களுக்கு குவாட்டர் மற்றும் தேநீர் காசு வழங்கப்படும் என்று உரிமையாளர் சுவரொட்டி மூலமாக விளம்பரம் செய்துள்ளது வைரலாகி வருகிறது. 

மேலும், இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவிக்கையில், தனது நிறுவனத்திற்கு வேலையாட்கள் எடுப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டும் தோல்வியை தழுவியது. 

இதனால் பணிக்கு வரும் நபர்களுக்கு இரவு நேரத்தில் குவாட்டர் மற்றும் தேநீருக்கு காசு என்று விளம்பரம் செய்த பின்னர் சில மணிநேரத்திற்கு உள்ளாகவே பலர் வந்துள்ளனர் என்று தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thirupur textile factory worker requirement successfully with liquor announcement


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->