தீராத சந்தேகம்.. மனைவியை கழுத்தறுத்து.. அருகில் இரத்த வெள்ளத்தில் பச்சிளம் குழந்தை..! திருப்பூரில் பேரதிர்ச்சி சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி மேற்கு வீதி பகுதியை சார்ந்தவர் நிஷார் அகமது (வயது 37). இவர் கழிவு குடோனில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி பிரிந்து சென்ற நிலையில்., இதே பகுதியை சார்ந்த ஹஸீனா (வயது 21) என்பவரை காதலித்து வந்துள்ளார். 

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில்., இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும்., நிஷாரிக்கு மது அருந்தும் பழக்கமானது இருந்து வந்த நிலையில்., மது போதையில் அவ்வப்போது தகராறு செய்து வந்துள்ளார். மேலும்., ஹசீனாவின் நடவடிக்கையில் சந்தேகமுற்று இருந்துள்ளான். 

இதனால் ஏற்படும் தகராறு அவ்வப்போது தொடர்ந்து வந்த நிலையில்., இன்று மீண்டும் சண்டை வந்துள்ளது. இந்த சமயத்தில் ஆத்திரமடைந்த நிஷார் வீட்டின் கதவை பூட்டிவிட்டு., மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். 

murder, killed, suicide attempt,

சம்பவ இடத்திலேயே ஹசீனா பரிதாபமாக பலியாகவே., நிஷாரும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்து செய்துள்ளார். அரைமயக்கத்துடன் நிஷார் மயங்கி இருந்த நிலையில்., ஹஸீனாவுடைய இரண்டு வயது குழந்தை தாயின் உடல் அருகே அழுதுகொண்டே இருந்துள்ளது. ஹஸீனாவுடைய தாயார் குழந்தை அழும் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

பின்னர் கதவை நீண்ட நேரம் தட்டியும் எந்த விதமான பயனும் இல்லாததால்., கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்க்கையில் இருவரும் இரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ஹசீனாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு., நிஷாரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thirupur girl killed by husband due to doubt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->