மூன்று மாவட்டத்தை குளிரவைத்து., மக்கள் மற்றும் விவசாயிகளை கொண்டாட வைத்த மழை..!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு வேளைகளில் நல்ல மழையானது பெய்து வருகிறது. மேலும்., நேற்று முன்தினந்தன்று அங்குள்ள கடலோர பகுதியில் அதிகளவு மழை பெய்தது. இதுமட்டுமல்லாது அங்குள்ள மேற்கு தொடர்ச்சி மழை பகுதியில் கனமழையானது பெய்தது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசி., சங்கரன்கோவில்., ஆயக்குடி., செங்கோட்டை., சிவகிரி., திருநெல்வேலி., பாளையங்கோட்டை மற்றும் சேரன்மாதேவி நேற்று இரவு முதல் காலை வரை நல்ல மழை பெய்து கொண்டு இருந்தது. இதுமட்டுமல்லாது அங்குள்ள களக்காடு., மாவடி., கருவேலங்குளம் பகுதிகளில் அதிகாலையில் திடீரென கனமழை பெய்தது. 

manimuthar dam, manimuthar falls, மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவி,

கனமழையின் எதிரொலியாக சாலைகளில் மழை நீர் தேங்கியதை அடுத்து., மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் வறண்டிருந்த நிலையில்., அருவிகளில் நீர் வரத்தானது அதிகரித்தது. மேலும்., மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பாபநாசம்., மணிமுத்தாறு., குண்டாறு., கடனாநதி., இராமநதி., கருப்பா நதி., கொடுமுடியாறு., அடவி நயினார் அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்தது. 

அங்குள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீரானது தேங்கியிருந்த நிலையில்., குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்குள்ள னைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆட்பறித்து கொட்டியதை அடுத்து., குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி., பழைய குற்றாலம்., ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. புலியருவியில் மட்டும் மிதமான தண்ணீர் வந்ததால்., சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளியல் போட்டனர். 

kovilpatti, கோவில்பட்டி, கோவில்பட்டி ரயில் நிலையம், kovilpatti railway station,

மேலும்., தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி., கடம்பூர்., எட்டையபுரம்., சாத்தான்குளம்., மணியாச்சி போன்ற பகுதியில் விடிய விடிய நல்ல மழையானது பெய்தது. கோவில்பட்டியில் காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில்., மாலையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். இதனைப்போன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூரில் வறட்சியானது நிலவி வந்தது. 

தமிழகம் முழுவதிலும் மழை கொட்டி தீர்த்து வந்தாலும்., விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்கு அருகில் உள்ள இந்த ஊர்கள் மழையில்லாமல் இருந்து வந்த நிலையில்., அங்குள்ள கண்மாய்கள் மற்றும் ஏரிகளிலும் நீர் இல்லாமல் விவசாய பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டது. இந்த தருணத்தில்., நேற்று காலையில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. 

அய்யனார் அருவி, iyyanar falls, iyyanar river, rajapalayam, இராசபாளையம்,

இந்த சமயத்தில்., மாலையில் திடீரென கருமேகங்கள் புடைசூழ துவங்கிய மழையானது கனமழையாக பெய்து மக்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சுமார் மூன்று மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையை அடுத்து., அங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருக்கும் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்தானது அதிகரித்தது. 

இதனையடுத்து அங்குள்ள அய்யனார் கோவில் ஆறு மற்றும் பேயனாறு., முள்ளியாற்றில் நீர் வாரத்தானது அதிகரித்தது. இதுமட்டுமல்லாது இராசபாளையம் பகுதியில் உள்ள கண்மாய்கள் மற்றும் ஏரிகள் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான அளவு நிரம்பியதை அடுத்து மக்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகினர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thirunelveli viruthunagar thoothukudi district have heavy rains


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->