ஆலங்குளம் வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.!! விசாரணையில் அதிர்ச்சியான காவல் துறையினர்.!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புதூர் அம்மன் கோவில் பகுதியை சார்ந்தவர் கெங்கை பாண்டி (23). இவர் அங்குள்ள மாறாந்தை சூரிய ஒளி சக்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த வாரத்தின் போது., திருநெல்வேலியில் இருக்கும் வெள்ளாங்குளத்தை அடுத்துள்ள சாலையில் வந்து கொண்டு இருக்கும் சமயத்தில்., மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடினர். 

இந்த சம்பவத்தில் நிலைகுலைந்த அவர் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர்., உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். 

அந்த விசாரணையில்., பாண்டியன் அடிக்கடி பெண் ஒருவருடன் அலைபேசியில் பேசி இருந்தது தெரியவந்தது. அந்த என் குறித்து விசாரித்த போது., அந்த பெண்ணின் பெயர் முப்பிடாதி என்றும்., அவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில்., முப்பிடாதிக்கும் - பாண்டியனுக்கும் முறையற்ற பழக்கமானது இருந்து வந்துள்ளது. 

இதனை அறிந்த முப்பிடாதியின் கணவர் இது குறித்து எச்சரிக்கவே., பழக்கத்தை கைவிடாமல் தொடர்ந்து மேற்கொண்டு வந்ததால் முப்பிடாதியின் கணவர் கணேசன் பாண்டியனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி., பாண்டியனுக்கு தொடர்பு கொண்டு ஊருக்கு வரும் படி முப்பிடாதியை வைத்து கூற சொல்லவே., இவரின் அழைப்பை ஏற்ற பாண்டியன் அங்குள்ள வெள்ளாங்குளம் விளக்கு பகுதியில் வந்து கொண்டு இருந்த சமயத்தில் அவரை வெட்டி கொலை செய்துள்ளனர்.   

இந்த சம்பவத்தில் கணேசன்., முப்பிடாதி., சுடலை முத்து மற்றும் சக்தி ஆகியோரின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும்., தலைமறைவாக இருந்த முப்பிடாதியை நேற்று அதிரடியாக கைது செய்த காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thirunelveli man killed case will end illegal affair by police investigation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->