மகளை அடித்தே கொலை செய்த தந்தை.! கொலையை மறைக்க உடந்தையாக தாயாரும் இருந்த சோகம்..!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிங்கை இராமலிங்கபுரம் பகுதியை சார்ந்தவர் கைலாஷ் (வயது 37). இவர் அங்குள்ள பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவியின் பெயர் லீலாவதி. இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலயில்., இரவர்களுக்கு ஐஸ்வர்யா (வயது 13) மற்றும் சுகிர்தா (வயது 7) என்ற இரு மகள்கள் உள்ளனர். 

ஐஸ்வர்யா அங்குள்ள ஆழ்வார்குறிச்சி பகுதியில் இருக்கும் பள்ளியில் பயின்று வரும் நிலயில்., இரண்டாவது மகளான சுகிர்தா அங்குள்ள சிங்கையில் இருக்கும் தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். இந்த நிலையில்., கணவன் - மனைவிக்கும் இடையே குடும்பத்தகராறு அடிக்கடி ஏற்படுவது வழக்கம். இவர்கள் இருவரும் குடும்பத்தகறாரின் போது சண்டையிடுவது வழக்கமாக வைத்துள்ளனர். 

இந்த நிலையில்., சம்பவத்தன்று வழக்கம்போல கணவன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி மற்றும் மகளை கைலாஷ் பலமாக தாக்கியுள்ளான். படுகாயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். ஆத்திரத்தில் மகளை அடித்ததால் அவர் இறந்துவிட்டோம் என்று எண்ணிய கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து கொலையை மறைக்க முடிவு செய்துள்ளனர். 

thirunelveli girl killed by father due to family problem

இவர்களின் திட்டப்படி மாடியில் இருந்து மகள் தவறி விழுந்ததாக அப்பகுதியில் இருக்கும் மக்களை நம்பவைத்த நிலையில்., இறுதிச்சடங்கிற்கும் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த தகவலானது சிங்கை காவல் துறையினருக்கு தெரியவரவே., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

இது தொடர்பாக தாய் - தந்தையிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவலானது வெளியாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிட்ணர்னர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thirunelveli girl killed by her father due to family problem


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->