அதிரடியாக உயர்ந்தது திருநெல்வேலியின் பிரதான அணைகள்...! கொண்டாட்டத்தில் விவசாயிகள்..!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே மழை பெய்து வந்தது. இந்த நிலையில்., கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தில் பெய்த கனமழை மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் அதிரடியாக உயர்ந்துள்ளது. 

இந்த நிலையில்., கடந்த இரண்டு நாட்களாக மழையின் அளவு குறைய துவங்கிய நிலையில்., இன்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்யாததால்., அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணைக்கு வினாடிக்கு சுமார் 5 ஆயிரம் கன அடி நீர் வந்த நிலையில்., இன்று காலை நிலவரப்படி சுமார் 1523 கன அடி நீராக குறைந்தது. 

papanasam dam, thirunelveli dams, tamilnadu tourist, பாபநாசம் அணை, திருநெல்வேலி அணைகள், தமிழ்நாடு சுற்றுலா, திருநெல்வேலி மாவட்ட அணைகள்,

கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று சற்று அதிகமான நேரத்தில் உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி சுமார் 95 அடியாக இருந்த நீர்மட்டம்., ஒரேநாளில் 2 அடி உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி 97.30 அடியாக உள்ள நிலையில்., நாளை மற்றும் நாளை மறுநாளில் நீர்மட்டத்தை அளவு 100 அடியை எளிதில் தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

papanasam dam, thirunelveli dams, tamilnadu tourist, பாபநாசம் அணை, திருநெல்வேலி அணைகள், தமிழ்நாடு சுற்றுலா, திருநெல்வேலி மாவட்ட அணைகள்,

இதனைப்போன்று அங்குள்ள சேர்வலாறு அணை நீர்மட்டம் 128.93 அடியாக இருந்த நிலையில்., எந்த விதமான மாற்றமும் இல்லாமல் நீர்மட்டம் உள்ளது. மணிமுத்தாறு அணையானது நீரின் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து 59.80 அடியாக உள்ளது. அங்குள்ள குண்டாறு., கொடுமுடியாறு அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளது. 

கடனாநதியின் நீர்மட்டம் சுமார் 64.20 அடியாகவும்., இராமநதியின் நீர்மட்டம் சுமார் 73 அடியாகவும்., கருப்பாநதியின் நீர்மட்டம் சுமார் 68.96 அடியாகவும்., அடவி நயினார் அணையின் நீர்மட்டம் சுமார் 115 அடியாகவும் உள்ளது. மேலும்., நெல்லை மாவட்டத்தை பொறுத்த வரையில் குண்டாரில் 25 மிமீ மழையும்., செங்கோட்டையில் 17 மிமீ மழையும்., அடவி நயினாரில் 7 மிமீ மழையும்., ஆய்குடியில் 2.4 மிமீ மழையும்., பாபநாசத்தில் 1 மிமீ மழையும்., சேர்வலாரில் 1 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thirunelveli district dams are filled


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->