தேனிக்கும் - மலேசியாவிற்கும் பாலமாக பேஸ்புக்.! காதலனை பார்க்க வந்த காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள கட்டுநாயக்கன்பட்டி பகுதியை சார்ந்தவர் நேரு. இவரது மகனின் பெயர் அசோக் குமார் (வயது 27). அசோக்குமார் ஐ.டி ஊழியராக பணியாற்றி வரும் நிலையில்., முகநூல் மூலமாக மலேசிய நாட்டில் உள்ள கோலாலம்பூரில் வசித்து வந்த ராஜு என்பவரின் மகளான விக்னேஸ்வரி (வயது 42) என்பவருடன் நட்பு கிடைத்துள்ளது. 

இவர்கள் இருவரும் முகநூலின் மூலமாக பழகிவந்த நிலையில்., இவர்களுக்குள் காதல் மலரவே., இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில்., தனது காதலனை காணுவதற்கு விக்னேஸ்வரி கடந்த நவம்பர் மாதத்தின் 1 ஆம் தேதியன்று தேனிக்கு வந்துள்ளார். தான் நேரில் வருவதை கூறிவிட்டு வந்த பெண்ணை., நேரில் கண்டதும் அசோக்குமார் தன்னை விட அதிக வயதுள்ள பெண் என்பதால் பதற்றமடைந்துள்ளார். 

மேலும்., இதனையடுத்து தன்னை விட அதிக வயதுள்ள பெண்ணை திருமணம் செய்ய இயலாது என்று அசோக் கூறவே., அசோக்கின் பெற்றோரிடமும் விக்னேஸ்வரி திருமணம் செய்து வைக்க கூறி கோரிக்கை வைத்துள்ளார். அவர்களும் உங்களுக்கு வயது அதிகமாக ஆகிறது என்று கூறி மறுப்பு தெரிவித்து அனுப்பிவைத்துள்ளனர். 

facebook, facebook love,

இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் அங்குள்ள வீரபாண்டி காவல் நிலையத்தில் இருவரும் புகார் அளித்திருந்த நிலையில்., விக்னேஸ்வரி மீண்டும் மலேசிய நாட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டதாக தெரியவருகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த விக்னேஸ்வரியின் உறவினர்கள் சேர்ந்து அசோக்குமார் மற்றும் அவருடைய தந்தை ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக மலேசிய உறவினர்கள் கூலிப்படையை தயார் செய்த நிலையில்., இவர்கள் அனைவரும் போடியில் இருக்கும் விடுதியில் தங்கியிருந்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இது குறித்த தகவல் காவல் துரையினருக்கு தெரியவரவே., சம்பவ இடத்திற்கு விரைந்து கூலிப்படை குழுவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in theni to Malaysia love crime activities police investigate about it


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->