தேனி டு மலேசியா முகநூல் காதல் விவகாரத்தில் கூலிப்படை.. போலி கணக்கில் பலே வேலை பார்த்த பெண்.. விசாரணையில் பகீர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள கட்டுநாயக்கன்பட்டி பகுதியை சார்ந்தவர் நேரு. இவரது மகனின் பெயர் அசோக் குமார் (வயது 27). அசோக்குமார் ஐ.டி ஊழியராக பணியாற்றி வரும் நிலையில்., முகநூல் மூலமாக மலேசிய நாட்டில் உள்ள கோலாலம்பூரில் வசித்து வந்த ராஜு என்பவரின் மகளான விக்னேஸ்வரி (வயது 42) என்பவருடன் நட்பு கிடைத்துள்ளது. 

இவர்கள் இருவரும் முகநூலின் மூலமாக பழகிவந்த நிலையில்., இவர்களுக்குள் காதல் மலரவே., இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில்., தனது காதலனை காணுவதற்கு விக்னேஸ்வரி கடந்த நவம்பர் மாதத்தின் 1 ஆம் தேதியன்று தேனிக்கு வந்துள்ளார். தான் நேரில் வருவதை கூறிவிட்டு வந்த பெண்ணை., நேரில் கண்டதும் அசோக்குமார் தன்னை விட அதிக வயதுள்ள பெண் என்பதால் பதற்றமடைந்துள்ளார். 

மேலும்., இதனையடுத்து தன்னை விட அதிக வயதுள்ள பெண்ணை திருமணம் செய்ய இயலாது என்று அசோக் கூறவே., அசோக்கின் பெற்றோரிடமும் விக்னேஸ்வரி திருமணம் செய்து வைக்க கூறி கோரிக்கை வைத்துள்ளார். அவர்களும் உங்களுக்கு வயது அதிகமாக ஆகிறது என்று கூறி மறுப்பு தெரிவித்து அனுப்பிவைத்துள்ளனர். 

இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் அங்குள்ள வீரபாண்டி காவல் நிலையத்தில் இருவரும் புகார் அளித்திருந்த நிலையில்., விக்னேஸ்வரி மீண்டும் மலேசிய நாட்டிற்கு சென்று தற்கொலை நாடகமாடிய நிலையில், விக்னேஸ்வரி அசோக்குமார் மற்றும் அவருடைய தந்தை ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். 

இதற்காக கூலிப்படையை தயார் செய்த நிலையில்., போடியில் உள்ள விடுதியில் பதுங்கியிருந்த கூலிப்படையை காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும், விசாரணையில் விக்னேஸ்வரி கொலை செய்ய திட்டமிட்டதும், முகநூல் கணக்குகளில் தனக்கு 45 வயது ஆவது போல காட்டிக்கொள்வது, பல பெயர்களில் பல இளைஞர்களை காதலில் கவிழ்த்து வந்ததும் தெரியவந்துள்ளது. 

கைதான கூலிப்படையை அன்பரசன் (வயது 24), முனியசாமி (வயது 27), அய்யனார் (வயது 30), திருமுருகன் (வயது 21), குமார் (வயது 20), பாஸ்கரன் (வயது 47), யோகேஷ் (வயது 20), தினேஷ் (வயது 22) மற்றும் கார்த்திக் (வயது 20) ஆகியோர் தற்போது சிறையில் உள்ளனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசனரியில் செந்நனையை சார்ந்த சோணைமுத்து என்ற நபருக்கு விக்னேஸ்வரி அதிக பணம் கொடுத்து கொலையை அரங்கேற்ற திட்டமிட்டது அம்பலமாகியது. 

இதனையடுத்து சோணைமுத்துவை தேடி வந்த காவல் துறையினர், சொந்த ஊரான கமுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தாதை அடுத்து, சோணைமுத்துவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். முக்கிய குற்றவிலையான விக்னேஸ்வரியை கைது செய்யவும் மலேசிய தூதரகம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Theni Malaysia love problem police want help to Malaysia embassy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->