100 அடி பள்ளத்தில் தலைகுப்பற கவிழ்ந்து உருண்டு விபத்திற்குள்ளான ஜீப்.. பரிதாபமாக பலியான பெண்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் கேரள எல்லை பகுதியில் சூரியநெல்லி கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு ஏராளமான தொழிலாளர்கள் ஜீப் மூலமாக பணிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும்., மலைப்பாதைகளில் அதிகளவில் ஜீப்கள் இயக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. 

இதன் காரணமாக அவ்வப்போது விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாகவும் குற்றசாட்டுகள் எழுந்த நிலையில்., இன்று ஜீப் கவிழ்ந்து அப்பகுதியை சார்ந்த இரண்டு பெண்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூரியநெல்லியில் வசித்து வரும் சுரேஷ் என்பவரின் மனைவி கார்த்திகா (வயது 29). இதே பகுதியை சிறந்த தமிழ் என்பவரின் மனைவி அமலா (வயது 32). இவர்கள் இருவரும் கூலித் தொழிலாளர்களாக பணியாற்றி வந்த நிலையில்., இவர்களை போல சுமார் 10 தொழிலாளர்கள் ஜீப்பில் மலைப்பகுதியில் உள்ள தோட்டத்திற்கு பணிக்கு செல்வது வழக்கம். 

died, suicide attempt, killed, murder,

இந்த நிலையில்., இன்று வழக்கம் போல அனைவரும் பணிக்கு சென்று கொண்டு இருந்த நிலையில்., முட்டுக்காடு என்ற இடத்திற்கு அருகே ஜீப் சென்ற நேரத்தில் எதிர்பாராத விதமாக 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் கார்த்திகா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

மேலும்., அமலா உட்பட 11 பேர் பலத்த காயமடைந்த நிலையில்., அமலாவை கேரள மாநிலத்தில் உள்ள அடிமாலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மீதமுள்ளவர்களை தேனி மாவட்டத்தில் இருக்கும் க.விளக்கு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in theni jeep accident woman died police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->