தனுஷ்கோடி - ஓர் சிறப்பு பார்வை.! ஊரே அழிந்தாலும்., எஞ்சிய கட்டிடங்களின் உயிரோட்டங்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்திய திருநாட்டின் கடைக்கோடி சுற்றுலாத்தலங்களுள் ஒன்றாக இருப்பது தனுஷ்கோடி. இந்த தனுஷ்கோடியானது புனித தளம் மட்டுமல்லாமல் சுற்றுலா தளமாக விளங்குவது பெருமைக்குறிய விஷயமாகும். 

பாரத இந்திய திருநாட்டில் நிலப்பரப்பில் கடைசி மாநிலமாக அமைந்துள்ள தமிழகத்தில் இருக்கும் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேசுவரம் தீவிற்கு தென்கோடி பகுதியில் அமைந்துள்ள அழகிய ஊர் தனுஷ்கோடி. இந்த தனுஷ்கோடியானது இராமேசுவரம் நகரில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவில் அமைத்துள்ளது. 

அன்றைய காலகட்டத்தில் கடல் வழியான இலங்கை வாணிபத்திற்கு தனுஷ்கோடி சிறந்த துறைமுக நகராக விளங்கியுள்ளது. இந்தியாவின் வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் சங்கமிக்கும் இடமாக அரிச்சல் முனையானது தற்போது திகழ்ந்து வருகிறது. இந்த கடற்கரையில் குளித்தால் மட்டுமே காசியின் யாத்திரையானது முடிவு பெரும் என்பது இந்து மக்களின் நம்பிக்கை. 

இந்த தனுஷ்கோடி நகரானது கடந்த 1964-ஆம் வருடத்தில் ஏற்பட்ட புயலின் தாக்கத்தால் கடலால் முழுவதுமாக சூழப்பட்டு., பின்னர் புயல் கரையை கடந்த பின்னர் எஞ்சியுள்ள பகுதியாக சிதலமடைந்த தேவாலயம் மற்றும் சில கட்டிடங்கள் உள்ளது. இந்த தனுஷ்கோடியில் இன்னும் சில மீனவ மக்கள் வசித்து வரும் நிலையில்., தினமும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 

இவர்களின் வருகையை அடுத்து சங்கு வியாபாரம்., அலைய புகைப்படங்கள் எடுத்தால் மற்றும் பிற வருமானத்தின் மூலமாக அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இராமேசுவரம் என்பது வெறும் புனித தளம் மட்டுமல்ல., சுற்றுலாத்தளமும் தான். இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக வெயில் மற்றும் மழையில் ஒதுங்குவதற்கு நிழற்குடைகள் மட்டும் கோரிக்கையாக உள்ளது. 

கடந்த 1964 ம் வருடம் ஏற்பட்ட புயலின் தாக்கத்தால் ஊரே அழிந்திருந்தாலும்., அதன் எஞ்சிய சிதலங்களின் உயிரோட்டங்கள் இன்னும் அங்கு வாழும் மக்களிடையே மற்றும் வந்து செல்லும் மக்களிடையே இருந்து வருகிறது. இதுமட்டுமல்லாது குறித்த காலத்தில் அங்கு வரும் பறவைகளின் அழகை காணவும் மக்கள் குவிந்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thanushkodi tourist place peoples want stopping to rest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->