தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விவகாரம் தொடர்பான வழக்கில், பிரமாணபத்திரம் தாக்கல் செய்த அறநிலையத்துறை.!! - Seithipunal
Seithipunal


ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் வானுயர ஓங்கி நிற்கின்ற தஞ்சை பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற பிப்ரவரி மாதம் 5- ஆம் தேதி தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெறவுள்ளது. டிசம்பர் மாதம் 2-ந்தேதி பாலாலயம் நடைபெற்றது. 

கும்பாபிஷேகத்துக்காக கோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்தில் யாகசாலை பூஜைக்காக 178 அடி நீளத்திலும், 108 அடி அகலத்திலும் பந்தல் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைக்காக 110 குண்டங்கள் அமைக்கும் பணிகள் மூன்று பிரிவுகளாக பிரித்து நடைபெற்று வருகிறது.

தஞ்சை குடமுழுக்கு விழாவானது ஆகம விதிப்படி நடைபெற வேண்டுமென ஒரு பிரிவினரும், தமிழ் வழிபாட்டு முறைப்படி நடைபெற வேண்டும் என ஒரு பிரிவினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கில் நடைபெற்ற இறுதி விசாரணையில், தஞ்சை பெரிய கோவில் தமிழ், சமஸ்கிருதம் என இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு நடைபெறும் என இந்து அறநிலையத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

தஞ்சை பெரிய கோவில் பிப்ரவரி 5-ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. எந்த மொழிகளில் குடமுழுக்கு செய்யப்படும் என்பதை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய இந்து அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

இதன் தொடர்ச்சியாக தற்போது குடமுழுக்கு நடைபெறும் அன்று கருவறை, குடமுழுக்கு நடக்கும் இடங்களில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அறநிலையத்துறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

23 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சை குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thanjavur temple court order HRCED


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->