சேர்ந்து வாழ முடிவு செய்து., ஊரை விட்டு ஓட்டம் பிடித்த கள்ளக்காதல் ஜோடி.! துடிதுடிக்க நேர்ந்த சோகம்.!!  - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினத்திற்கு அருகில் இருக்கும் எரிபுறக்கரை கிராம பகுதியை சார்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவியின் பெயர் கலையரசி (வயது 31). இவர்கள் இருவருக்கும் கடந்த 14 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் முடிந்த நிலையில்., 13 வயதுடைய மகன் ஒருவரும்., 10 வயதுடைய மகன் ஒருவரும் இவர்களுக்கு பிள்ளைகளாக உள்ளனர். 

இந்த நிலையில்., கலையரசி அங்குள்ள சத்துணவு கூடத்தில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வரும் நிலையில்., அதே பகுதியை சார்ந்த 28 வயதுடைய வடிவேல் என்பவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கூலித்தொழிலாளியான வடிவேலிற்கு சவுந்தர்யா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இரண்டு வயதுடைய மகன் உள்ளார். 

இந்த சமயத்தில்., கலையரசிக்கும் - வடிவேலிற்கும் பழக்கமானது ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே., இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த முறையற்ற பழக்கமானது ஜெய்குமாருக்கு தெரியவரவே., இருவரையும் கண்டித்து கள்ளக்காதல் பழக்கத்தை கைவிட கூறி முறையிட்டுள்ளார். 

இதனை கண்டு கொள்ளாத இருவரும் கள்ளக்காதல் பழக்கத்தை தொடர்ந்து மேற்கொண்டு வந்த நிலையில்., ஆத்திரமடைந்த ஜெயக்குமார் தனது மனைவியை விவாகரத்து செய்தார். இந்த சமயத்தில்., கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் ஊரில் இருந்து ஓட்டம் பிடித்த கள்ளக்காதல் ஜோடி அங்குள்ள கடற்கரை சாலையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து இறந்து கிடந்துள்ளார். 

இவர்களை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து சென்று பார்த்த சமயத்தில் வடிவேல் இறந்தும்., கலையரசி உயிருக்கு போராடி கொண்டும் இருந்துள்ளார். இதனையயடுத்து இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த காவல் துறையினர்., கலையரசியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சமயத்தில்., வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thanjavur illegal affair couple attempt suicide


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->