தமிழகத்தில் 10 வருடத்தில் ஏற்பட்ட மொத்த புயல்கள் எத்தனை?.. பலியான உயிர்கள்?.. வெளியான ரிப்போர்ட்.!! - Seithipunal
Seithipunal


கடந்த வருடத்தில் தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தொடர்பான ஆய்வறிக்கையை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ள நிலையில்., கடந்த 10 வருடங்களில் ஏற்பட்ட புயல்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2000 ஆவது வருடத்திற்கு பின்னர் 6 பெரிய புயல்கள் உருவாகியுள்ள நிலையில்., கடந்த 2005 ஆம் வருடத்தில் பியார்., பாஸ் மற்றும் பனூஸ் என்ற 3 பெரிய புயல்கள் உருவாகி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

இதற்கு அடுத்தபடியாக உள்ள 10 வருடங்களில் 5 பெரிய புயல்கள் பெரும் உயர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2008 ஆம் வருடத்தில் நிஷா புயல் ஏற்பட்டு., சுமார் 102 கிமீ வேகத்தில் காரைக்கால் பகுதியில் வீசிய புயலில் 189 பேர் உயிரிழந்தனர்.

storm, flood,

பின்னர் 2011 ஆம் வருடத்தில் வீசிய தானே புயல் கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில்., 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்., 2016 ஆம் வருடத்தில் ஏற்பட்ட வர்தா புயலில் 22 பெரும்., 2017 ஆம் வருடத்தில் ஏற்பட்ட ஓக்கி புயலில் 22 பெரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும்., ஓக்கி புயலின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முற்றிலும் சிதைந்த நிலையில்., சுமார் 185 மீனவர்கள் காணாமல் போனார்கள். இந்த புயலுக்கு பின்னர் ஏற்பட்ட கஜா புயலில் 52 பேர் உயிரிழந்த நிலையில்., மொத்தமாக ஏற்பட்ட தமிழகத்தில் 359 பேர் பரிதாபமாக பலியாகினர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in tamilnadu last 10 year storm and died peoples quantity


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->