14 க்கும் மேற்பட்ட இடங்களில் சதத்தை தாண்டிய வெயில்.! திருத்தணி., சேலத்தை தொடர்ந்து இங்கும் சுட்டெரித்த வெயில்.!! - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய முழுவதும் வெயிலின் தாக்கமானது அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில்., தமிழகத்தை ஃபாணி என்ற புயலானது தாக்கக்கூடும் என்றும்., இதனால் தமிழகத்திற்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் எதிர்பார்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. 

இந்த நிலையில்., ஃபாணி புயலானது தமிழகத்தை நெருங்காமல் ஒடிசாவை நோக்கி பயணித்து., ஒடிசா மற்றும் மேற்கு வங்காள பகுதிகளில் தனது கோரத்தாண்டவத்தை வெளிப்படுத்திய நிலையில்., தமிழகத்திற்கு மழை பெய்யும் என்று எதிர்பார்த்த கஜா புயலும் தனது கோரத்தாண்டவத்தை வெளிப்படுத்தி மக்களை வாட்டி வதைத்தது. 

வெயிலின் தாக்கமானது தற்போது கடுமையாக அதிகரித்து கொண்டு வந்த நிலையில்., சாதாரண நாட்களில் எளிதாக சுமார் 100 டிகிரி வெப்பத்தின் அளவை பதிவு செய்து மக்களை கடுமையான துன்பத்திற்கு உள்ளாக்கியது. இதன் காரணமாக வெளியே சென்று வரும் மக்கள்., பணிகளுக்கு சென்று வரும் மக்கள் கடுமையான துன்பத்தை அனுபவித்து வரும் நிலையில்., கொளுத்தும் வெயிலின் அளவானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாது சாலைகளில் நடந்து கூட செல்ல இயலாத அளவிற்கு அனல் காற்றானது வீசி வருகிறது. 

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு பெரும்பாலும் மக்கள் பகல் வேளைகளில் வெளியே சென்று வருவதை முற்றிலுமாக குறைந்துள்ள நிலையில்., குளிர்பான கடைகள்., பழச்சாறு விற்பனை செய்யும் கடைகள்., இளநீர் மற்றும் நுங்கு., கூழ்கள் விற்பனை செய்யும் கடைகளில் மக்கள் அதிகளவு குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில்., பல நகரங்களில் வெப்பத்தின் அளவானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தலைநகர் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில் சுமார் 100.4 டிகிரி செல்சியசும்., மீனம்பாக்கத்தில் சுமார் 101.48 டிகிரி செல்சியசும்., கோயம்புத்தூரில் சுமார் 98.6 டிகிரி செல்சியசும்., குன்னூரில் சுமார் 79.7 டிகிரி செல்சியசும்., கடலூரில் சுமார் 100.94 டிகிரி செல்சியசும்., தர்மபுரியில் சுமார் 102.2 டிகிரி செல்சியசும்., கன்னியாகுமரியில் 90.68 டிகிரி செல்சியசும்., கரூரில் 105.8 டிகிரி செல்சியசும்., கொடைக்கானலில் சுமார் 73.22 டிகிரி செல்சியசும்., மதுரையில் சுமார் 105.8 டிகிரி செல்சியசும் வெப்பமானது பதிவாகியுள்ளது.

இதனைப்போன்று நாகப்பட்டினத்தில் சுமார் 100.76 டிகிரி செல்சியசும்., நாமக்கலில் சுமார் 102.2 டிகிரி செல்சியசும்., பாளையங்கோட்டையில் சுமார் 102.38 டிகிரி செல்சியசும்., புதுச்சேரியில் சுமார் 102.2 டிகிரி செல்சியசும்., சேலத்தில் சுமார் 104.54 டிகிரி செல்சியசும்., தஞ்சாவூரில் சுமார் 95 டிகிரி செல்சியசும்., திருச்சியில் சுமார் 107.24 டிகிரி செல்சியசும்., திருத்தணியில் சுமார் 113.18 டிகிரி செல்சியசும்., தூத்துக்குடியில் சுமார் 91.76 டிகிரி செல்சியசும்., ஊட்டியில் சுமார் 53.42 டிகிரி செல்சியசும்., வால்பாறையில் சுமார் 81.5 டிகிரி செல்சியசும்., வேலூரில் சுமார் 110.48 டிகிரி செல்சியசும் வெயிலின் தாக்கமானது பதிவாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in tamilandu heavy heat wave forecast peoples affected heavly


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->