சுஜித் விஷயத்தில் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா? மாண்புமிகு முதல்வர்..!!  - Seithipunal
Seithipunal


மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் எனும் கிராமத்தை சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளியான பிரிட்டோ ஆரோக்கியதாஸ். இவரது 2 வயது மகன் சுஜித் வின்சென் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த 610 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளான். இந்த ஆழ்துளைக்கிணற்றில் 30 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனின் அலறலை கேட்டு அதிர்ச்சியடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள், சுஜித்தை மீட்கும் முயற்சியாக ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் பொக்லைன் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். 20 அடி ஆழம் தோண்டப்பட்ட நிலையில் பாறை இருந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

trichy, manaparai, திருச்சி, மணப்பாறை, manaparai bore well child, surjith baby, surjith,

இதெற்கிடையே, மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் உருவாக்கிய பிரத்தியேக இயந்திரத்தின் மூலமாக குழந்தையை மீட்கும் முயற்சி நடைபெற்றது. இரவு 10.30 மணிக்கு இயந்திரத்தின் வழியாக விடப்பட்ட கயிற்றைக் கொண்டு கைகளில் சுருக்கு போட முயற்சி மேற்கொள்ளப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்றது. இதையடுத்து மதுரை, திருச்சி மற்றும் கோவையிலிருந்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். மூன்று மாவட்ட தீயணைப்பு துறையினரும் தாங்கள் கொண்டு வந்த சாதனங்களை வைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரமாக நடைபெற்ற மீட்புப் பணியில் பின்னடைவு ஏற்பட்டது.அதிகாலை 2.30 மணிக்கு சென்னை ஐஐடியைச் சேர்ந்த குழுவினர் வந்து பிரத்யேக சாதனங்களை கொண்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 

trichy, manaparai, திருச்சி, மணப்பாறை, manaparai bore well child, surjith baby, surjith,

மேலும்., சிறுவனின் குரலானது சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மேலாக கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. சிறுவன் சனிக்கிழமை நிலவரப்படி 70 அடி ஆழத்தில் இருந்த நிலையில்., சனிக்கிழமை பகல் 12 மணிக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இவர்களுக்கு அடுத்தபடியாக 12.45 மணியளவில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து மீட்பு பணிகளை துவங்கினர். இவர்களுக்கு உதவியாக அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பாகவும் இரவில் அதிகாரிகள் விரைந்து மீட்பு குழுவினருக்கு உதவி செய்ய விரைந்து., குழந்தை சிக்கியுள்ள பகுதியில் இருக்கும் மண்ணின் தன்மை குறித்து ஆய்வு மற்றும்., பிற தொழில்நுட்ப உதவிகளையும் செய்ய விரைந்தனர். இதனைத்தொடர்ந்து நெய்வேலி சுரங்க குழு சார்பாகவும்., எல்.அன்.டி கட்டுமானத் துறை சார்பாகவும் குழுக்கள் விரைந்தது.  

trichy, manaparai, திருச்சி, மணப்பாறை, manaparai bore well child, surjith baby, surjith,

தற்போது குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளைக்கிணறு அருகேயே., மற்றொரு ஆழ்துளைக்கிணறு அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் வெள்ளிக்கிழமை முதலாகவே அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி என்.நடராஜன், வளர்மதி, மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர்., தீயணைப்பு படையினர்., மீட்பு படையினர் பல அரசு மற்றும் பிற அதிகாரிகள் அருகில் இருந்து குழந்தை மீட்புப் பணிகளைக் கண்காணித்து, ஆலோசனைகளை வழங்கி வந்தனர். 88 அடி ஆழத்தில் ஆழ்துளைக்கிணற்றில் சிக்கியிருந்த குழந்தையை ஒவ்வொரு நிமிடமும் இதோ மீட்டுவிடலாம்., அதோ மீட்டுவிடலாம் என்று பல விதமான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தது. இறுதியாக குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளைக்கிணறு அருகேயே 1.2 மீ விட்டம் அளவுள்ள பெரிய ஆழ்துளைக்கிணறு அமைக்க முடிவு செய்து பணிகளும் துவக்கப்பட்டது.  அதிலும் தொடர் போராட்டம்... இப்போது வெளியே வந்துவிடுவான் குழந்தை., அப்போது வெளியே வந்துவிடுவான் குழந்தை என்று கண்ணீர் துயரில் குழந்தையின் தாயார் மட்டுமல்லாது., தமிழகமே சோகத்தில் ஆழ்ந்தது. 

trichy, manaparai, திருச்சி, மணப்பாறை, manaparai bore well child,

நீ மீண்டு வரும் நாளே எங்களுக்கு தீபஒளித் திருநாள் என்று தமிழக மக்கள் காத்திருக்க., இயற்கைக்கு முன்னர் எங்களை சரணடைய வைத்தால் அந்த பூமி தேவி.. எது என்னவோ சுர்ஜித்தின் தாயரை விட அதிக பாசத்தினை கொண்டதினாலோ என்னவோ., பூமி தேவி தன்னுடன் சுர்ஜித்தை வைத்துக்கொண்டாள்... அரசு அதிகாரிகளும் - தனியார் அதிகாரிகளும் - பொது ஆர்வலர்களும் என பலரும் மேற்கொண்ட பல விதமான யோசனை., திட்டங்கள்., செயல்பாடுகள் அனைத்தும் 81 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் பயனற்று போனது... சிறுவனின் உடல் ஆழ்துளைக்கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு., பிரேத பரிசோதனைக்கு பின்னர் அங்குள்ள ஆவாரம்பட்டி கல்லறையில் நல்லடக்கமும் செய்யப்பட்டது... 

trichy, manaparai, திருச்சி, மணப்பாறை, manaparai bore well child, surjith baby, surjith,

இந்த விஷயத்தில்., நாம் யாரின் மீது குற்றம் உள்ளது., யார் தவறு செய்தவர்கள் என்று பேசிக்கொண்டு இனியும் காலம் தாழ்த்துவதை தவிர்த்துவிட்டு., இனிவரும் காலங்களில் இது போன்ற துயரங்களில் இருந்து விலக்கம் கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பிரச்சனையை தவிர்ப்பதற்கு பஞ்சாப் மாநிலத்தில் இதேபோன்றதொரு துயரம் ஏற்பட்ட பின்னர்., "தாண்ட்டிரெஸ்ட் பஞ்சாப் மிஷின்" என்ற பெயரில் மூடப்படாத ஆழ்துளைக்கிணறுகள் குறித்த தகவலை வழங்குபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் சன்மானமும் வழங்கி ஆழ்துளைக்கிணறுகளை மூடியுள்ளனர். இந்த திட்டம் நல்ல வகையில் கை கொடுத்ததாகவும் அம்மாநில அரசு சார்பாக தெரிவித்துள்ளனர். இதனைப்போன்ற சட்டம் குறைந்தபட்ச தொகையளிக்கும் வகையில் சட்டங்களை அமல்படுத்தலாம். 

trichy, manaparai, திருச்சி, மணப்பாறை, manaparai bore well child, surjith baby, surjith,

என்னதான் சட்டங்களை அமல்படுத்தி கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறினாலும்., தனிமனிதனின் விழிப்புணர்வு மற்றும் தன்னார்வத்தால் மட்டுமே இதனைப்போன்ற துயரங்களை இனியாவது தவிர்க்க இயலும். இந்த துயர நிகழ்வின் காரணமாக ஒட்டுமொத்த கிராமமும் மட்டுமல்லாது., தமிழகமும் - இந்தியாவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. பல இரங்கல் செய்திகள் - பல கோரிக்கைகள் என தொடர்ந்து எழும் வண்ணம் இருக்கும் சமயத்தில்., சுஜித்தின் இழப்பை ஈடு செய்ய இயலாத நிலையில்., குடும்பத்தினருக்கு நிதியுதவி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும்., இனி இதனைப்போன்ற துயர சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் சட்டங்களை அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in sujith died tamilandu govt help to her family peoples request


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->