இணையத்தில் உச்சத்துடன் இருக்க எடுத்த முடிவால், உச்சா கூட போகமுடியாமல் தவிக்கும் நபர்..!! கோவையில் பரிதாபம்..!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு புதூர் பகுதியை சார்ந்தவர் கவி தமிழ் செல்வன் (வயது 42). தன்னை நுவர்வோர் அமைப்பு நிர்வாகி என்று அறிமுகம் செய்து வந்த நிலையில்., அரசு அலுவலங்கங்களுக்கு சென்று அங்கிருக்கும் உயர் அதிகாரியுடன் செல்பி எடுத்து தனது நண்பர்கள் மற்றும் நன்கு அறிமுகமானவர்கள் என்று காட்டிக்கொண்டுள்ளார். 

மேலும்., அதிகாரிகளுடன் எடுத்த புகைப்படங்களை வாட்சப் மற்றும் முகநூல் பக்கத்தில் பதிவு செய்து வந்த நிலையில்., கடந்த மாதத்தின் போது சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமர் மோடியின் சந்திப்பில் மோடியுடன் சீன அதிபர் பேசும் புகைப்பட காட்சிகள் வெளியானது அனைவரும் அறிந்த ஒன்றே..

இந்த புகைப்படத்தில் இருக்கும் சீன அதிபரின் புகைப்படத்தை எடுத்துவிட்டு., கவிதமிழ் செல்வன் தனது புகைப்படத்தை வைத்து., அதற்கருகில் மோடிக்கு இருப்பது போலவும்., இருவரும் கைகுலுக்குவது போலவும் சித்தரித்து இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இது குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். 

இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் சைபர் கிரைம் காவல் துறையினருக்கு விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்திய நிலையில்., இது குறித்த விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் கவிதமிழ் செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கிராபிக்ஸ் செய்து புகைப்படம் பதிவேற்றியதை ஒப்புக்கொண்ட நிலையில்., இது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தான் இணையத்தில் உச்சத்திற்கு வர வேண்டும் என்று எண்ணி செய்த செயலால்., தற்போது காவல் துறையினர் வசம் சிக்கி உச்சா கூட போக முடியாமல் தமிழ் செல்வன் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இணையதளத்தை எதற்கு உபயோகம் செய்ய வேண்டுமோ? அதற்கு உபயோகம் செய்வது நல்லது.. மாறாக, லைக்குகளுக்காக விதிமுறைகள் மேற்பட்டால் என்ன ஆகும் என்பது நன்கு தெளிவாகியுள்ளதாக நெட்டிசன்கள் இவரை வைத்து கலாய்த்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in social media modi china president photo teased by coimbatore man


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->