12 வருடத்திற்கு முன்னர் காணாமல் போன விவசாயி வழக்கில் திடீர் பேரதிர்ச்சி திருப்பம்.! சிவகிரியில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள சிவகிரிக்கு அருகேயுள்ள தேவினம்பட்டினம் பகுதியை சார்ந்தவர் மன்னர். இவர் கடந்த 2012 ஆம் வருத்தின்., ஜனவரி மாதம் 7 ஆம் தேதியன்று தனது உறவினர் கந்தனின் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற நிலையில்., திடீரென மாயமாகினார். இவரை காணாது தேடி அலைந்த இவரின் மனைவி மேரி., அங்குள்ள சிவகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் பலதரப்பட்ட விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., எந்த விதமான துப்பும் கிடைக்காமல் போனதால்., இந்த வழக்கு குறித்த விசாரணை கிடப்பில் கிடந்து வந்தது. 

இந்த நிலையில்., வருடங்கள் அடுத்தடுத்து சென்று கொண்டே இருந்தும்., விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால்., தனது கணவரை கண்டுபிடித்து கொடுக்க கூறி., மதுரை உயர்நீதிமன்றத்தில் கடந்த வருடத்தின் போது ஆட்கொணர்வு மனுவை மேரி தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிபதி., இது குறித்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றிய பின்னர்., இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளர் அனில்குமார் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., இறுதியாக இந்த வழக்கில் அதே பகுதியை சார்ந்த பன்னீர் செல்வம் என்பவரின் குடும்பத்தார் வழக்கு விசாரணைக்குள் வந்துள்ளனர். 

died, murder, suicide attempt, killed,

கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னதாக கந்தன் என்பவரின் தோட்டத்தில்., தண்ணீரை பாய்ச்சிவிட்டு மன்னார் வீடு திரும்பிய நிலையில்., பன்னீரின் தோட்டத்தின் வழியாக சென்றுள்ளார். இந்த சமயத்தில்., காட்டு பன்றியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பன்னீர் செல்வத்தின் நிலத்தில் அனுமதியற்று இருந்த மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில்., மறுநாள் காலையில் பன்னீர் வயலில் தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். இந்த சமயத்தில்., இவருடன் பன்னீரின் மனைவி மற்றும் மருமகன் பாலகுரு ஆகியோர் சென்றுள்ளனர். 

மன்னார் உயிரற்று கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அனைவரும்., மின்சார வேலி அமைத்தது தொடர்பாக விசாரணை வரும் என்று பயந்து., மன்னாரின் உடலை யாருக்கும் தெறியாமல் தோட்டத்திலேயே புதைத்துள்ளனர். மேலும்., பன்னீர் கடந்த சில வருடத்திற்கு முன்னதாக உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில்., பாலகுரு மற்றும் அவரது மாமியாரை காவல் துறையினர் கைது செய்து., மன்னாரின் உடலை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தற்போது வெளிவந்து பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in sivagiri farmer murder case investigation CBCID report


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->