ஜல்லிக்கட்டு காளையின் தாய் மனது... தாய் - குழந்தைகளை தாவி சென்ற காளை..!! - Seithipunal
Seithipunal


தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு பொங்கல் பண்டிகையின் போது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவது இயல்பான ஒன்றாகும். கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக ஜல்லிக்கட்டை தடை செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 

தடைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டு ஜல்லிக்கட்டு இன்று மக்களுக்காக, தமிழர்களுக்காக ஜல்லிக்கட்டுபோட்டிகள் மீண்டும் நடைபெற்று வருகிறது. இதற்க்காக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பிற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஜல்லிகட்டுப்போட்டி நடைபெறும் இடங்களில் அமரும் மாடம், அலங்கார வளைவு, ஒலிபெருக்கி, சிசிடிவி கண்காணிப்பு காமிராக்கள், மருத்துவ முகாம்கள் மற்றும் பாதுகாப்பு வேலிகள் போன்றவை அமைக்கப்பட்டு இருந்தது.

மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. காலை சுமார் 8 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி, மாலை 4.30 மணிவரை போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் 700 காளைகள் மற்றும் 730 வீரர்கள் பங்கேற்றனர். மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு மாட்டுப்பொங்கல் அன்று காலை துவங்கி மாலை 5 மணிவரை நடைபெற்றது. இந்த போட்டியில் சுமார் 700 காளைகளும், 923 வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் 1500 காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

காணும் பொங்கலான நேற்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. காலையில் துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 700 வீரர்கள், 800 காளைகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டி காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5.10 வரை நடைபெற்றது. போட்டிகளில் பல வீரர்கள் மற்றும் காளைகள் கலந்து கொண்டு மாஸ் காட்டினார். இதனைப்போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிகட்டுப்போட்டி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தற்போது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. 

இது தொடர்பான புகைப்படம் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் இருந்து வெளியே வந்த நிலையில், ஜல்லிக்கட்டு காளை வாடிவாசலில் இருந்து வெளியே வந்த நேரத்தில், ஒரு தாயொருவர் தனது இரண்டு மகன்களுடன் நிற்கவே, அதிவேகத்தில் ஓடி வந்த காளை இவர்களை கண்டதும், அவர்களை தாக்காது இருக்க எகுறி குதித்து சென்றுள்ளது இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in sivagangai jalikat mother and son saved by jallikat kalai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->