காதல் திருமணம்., குழந்தை பிறக்கவில்லை.! தம்பதியின் எண்ணத்தால் நேர்ந்த சோகம்.!! பதறிப்போன அக்கம்பக்கம்., காவல் துறையினர்.!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரியை அடுத்துள்ள ஆதனூர் பகுதியை சார்ந்தவரின் இல்லத்தில் இருந்து நேற்றிரவு திடீரென கரும்புகையானது மளமளவென வெளிவந்தது. அந்த வீட்டில் இருந்து கேட்கப்பட்ட அலறல் சத்தத்தை கவனித்த அக்கம் பக்கத்தினர் பதறியபடி கீழே வந்தனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரிந்த காவல் துறையினர் பொதுமக்களின் உதவியுடன் உள்தாழிட்டு இருந்த கதவை உடைத்து கொண்டு சென்ற போது கணவன் மற்றும் மனைவி தீயெரிந்து கொண்டு இருந்த நிலையிலும்., வீட்டில் உள்ள பொருட்கள் தீப்பற்றி எரிய தொடங்கிய நிலையிலும் இருந்தது. இதற்குள் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த பெண்ணை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு., பரிதாபமாக உயிரிழந்த ஆணின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செங்கல்பட்டு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு., பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில்., அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபக உயிரிழந்தார். 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில்., இவர்கள் இருவரும் கடந்த 6 வருடங்களுக்கு முன்னதாக காதலித்து வந்த நிலையில்., இருவரும் வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பதால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து கடந்த 6 வருடங்கள் ஆகும் நிலையில்., குழந்தை பெரும் ஏதுமில்லை. 

இதனை மையமாக வைத்து அடிக்கடி ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மனமுடைந்து தற்கொலை எண்ணத்திற்கு துணிந்துள்ளனர். அதன் படி வீட்டில் இருவரும் மண்ணெண்னையை ஊற்றி கொண்டு தற்கொலை செய்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

English Summary

in sengalpet husband and wife attempt suicide


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal