போலி திருமண தகவல் மையங்கள்... உஷார்படுத்தும் காவல் துறை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் சமூக வலைத்தளத்தில் உலாவும் இளம்பெண்களின் புகைப்படத்தினை சேகரித்து வைத்து கொண்டு, போலியாக மேட்ரமோனி இணையத்தை துவக்கி பணமோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. 

சேலம் மாவட்டத்தில் உள்ள சிவதாபுரம் பகுதியை சார்ந்த ஜெய்சங்கர் என்பவர் தனது மகனுக்கு பெண்பார்க்க வாட்சப் மூலமாக தனியார் மேட்ரிமோனியை தொடர்பு  கொண்டுள்ளார்.

இவர்கள் பெண்ணின் புகைப்படம் மற்றும் முகவரியை அனுப்புவதற்கு இரண்டு தவணையாக ஜெய்சங்கரிடம் ரூ.5 ஆயிரம் பெற்றுள்ளனர். மேலும்., பணத்தினை பெற்று கொண்ட கும்பலின் அலைபேசி எண் துண்டிக்கப்பட்டுள்ளது. 

மேலும்., பணத்தை பெற்றுக்கொண்ட கும்பலிடம் இருந்த புகைப்படங்கள் முகநூலில் கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். மேலும். இது தொடர்பான புகைப்படங்கள் பலரால் பகிர்வு செய்யப்பட்ட பிற கல்லூரி பெண்கள் புகைப்படம் என்பதும் தெரியவனத்துளது. இது தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in selam police awareness about fake matrimonial website


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->