டெய்லி நைட் பூட்டு உடைக்கலனா தூக்கம் வராது சார்..! திருடனின் பகீர் வாக்குமூலம்.. அதிர்ச்சியில் சேலம் காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் திருட்டு தொடர்பாக காவல்துறையினருக்கு அடுத்தது புகார்கள் வந்துள்ளது. இதனை ஏற்ற காவல்துறையினர் சந்தேகத்துக்கிடமான பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். 

மேலும்., இது குறித்த புகாரை விசாரணை செய்ய தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில்., கடந்த 40 நாட்களாக காவல்துறையினரை தூங்கவிடாமல் அலைக்கழித்த திருடன் ஐய்யன்துறை என்பவரை கைது செய்துள்ளனர். 

selam, selam railway station, சேலம் ரயில்வே நிலையம்,

சேலம் மாவட்டத்திலுள்ள பாகல்பட்டி பகுதியை சார்ந்தவர் ஐய்யன்துறை. இவர் கடந்த 1990 ஆம் வருடத்தில் இருந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளவர் என்பது தெரியவந்துள்ளது. 

மேலும்., சேலம் மற்றும் கோயம்புத்தூர்., நாமக்கல் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் இவரின் மீது புகார்கள் உள்ளது. தற்போது புதிய திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐய்யன்துறை., கோயம்புத்தூர் மத்திய சிறையில் இருந்து கடந்த 40 நாட்களுக்கு முன்னதாக வெளியே வந்துள்ளார். 

பின்னர் சேலத்திற்கு வந்து தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில்., காவல் துறையிடம் இருந்து தப்பிக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதிலும் கில்லாடி என்றும் கூறப்படுகிறது. 

police, police arrest, police arrest culprit,

தற்போது காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில்., தினமும் திருடவில்லை என்றால் தனக்கு தூக்கம் வராது என்றும்., திருட்டு தொழிலில் அடிமையானதால் தினமும் திருடுவதை வழக்கமாக வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்த தகவல் காவல் துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்., தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்வதற்கான நடவடிக்கையை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in selam police arrest thief investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->