முகநூல் காதல்.. தாயுடன் சேர்ந்து சிறுமியை கடத்தி........ நீலகிரியில் பேரதிர்ச்சி..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியை சார்ந்தவர் அஜித்குமார் (வயது 20). இவர் அவ்வப்போது அலைபேசியில் முகநூல் செயலியை பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நேரத்தில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியை சார்ந்த 17 வயது சிறுமியுடன் அஜித்திற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கமானது துவக்கத்தில் முகநூலில் இருவரும் பேசிக்கொண்டு வந்த நிலையில், இருவரும் அலைபேசி எண்ணை பகிர்ந்து பேசி வந்துள்ளனர். அஜித்தும் சிறுமியிடம் காதல் வலையை வீசி பேசி வந்துள்ளான். 

இவனது பேச்சில் மயங்கிய சிறுமியும் காதல் வலையின் சூழ்ச்சியில் சிக்கவே, இருவரும் தங்களின் காதலை பேசி பேசி வளர்த்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு பின்னர் அஜித் சிறுமியிடம் திருமண ஆசையை வளர்க்கவே, சிறுமியும் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாயமாகியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியை காணாது தேடிய பெற்றோர்கள், இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த நேரத்தில், சிறுமியும் - அஜித்குமாரும் பந்தலூருக்கு வந்திருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், அஜித் சிறுமிக்கு திருமண ஆசை காட்டி, கேரளாவுக்கு அழைத்து சென்று கோவிலில் திருமணம் செய்ததும், எர்ணாகுளத்தில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், இந்த கடத்தலில் அஜித்தின் தாய் மற்றும் தங்கை உடைந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது. 

இதனைதொடர்ந்து சிறுமியை அங்குள்ள தேவாலா மகளீர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், சிறுமியை கடத்தி திருமணம் செய்த அஜித்தின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சிறுமிக்கு ஆலோசனை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in selam child marriage by drama lover


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->