சேலம் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில், ஒரு வருடத்திற்கு பின்னர் கைதான கொலையாளிகள்... விசாரணையில் பேரதிர்ச்சி..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரம் அருகேயுள்ள நச்சம்பட்டி சொலவடை பகுதியை சார்ந்தவர் சக்திவேல் (வயது 38). இவர் ரியல் எஸ்டேட் அதிபராக இருந்து வந்தார். இவர் கடந்த 2018 ஆம் வருடத்தில் செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதியில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பி வீட்டிற்கு வரவில்லை. இதனால் இவரது மனைவி ரேவதி, இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சுமார் 6 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் அனாதைப்பிணம் அங்குள்ள காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து செப்டம்பர் 24 ஆம் தேதி மாயமான சக்திவேல் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். 

இதன் பின்னர் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், ஈரோடு பகுதியை சார்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சீனிவாசன் (வயது 41) மற்றும் புஷ்பராஜ் (வயது 40) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ரியல் எஸ்டேட் அதிபரான சக்திவேலுடன் இணைந்து, சீனிவாசன் மற்றும் புஷ்பராஜும் தொழில் செய்து வந்துள்ளனர். 

தமிழகத்தில் இருக்கும் பல்வேறு நிலங்களின் விற்பனை தன்மை அறிந்து சக்திவேலை சம்பந்தப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்று, மூவரும் சேர்ந்து நிலத்தை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர். இந்த சமயத்தில், சக்திவேல் நிலத்திற்கு அதிகளவு முதலீடு செய்வதை அறிந்து, இவரை ஏமாற்றி இருவரும் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர். 

இவர்களின் திட்டப்படி மேட்டுப்பாளையம் பகுதியில் நிலம் இருப்பதாக கூறி சக்திவேலை அழைத்து சென்ற நிலையில், முன்னதாகவே தயாராக இருந்த கூலிப்படை கும்பல் மற்றும் சீனிவாசன், புஷ்பராஜ் சேர்ந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இவர் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்து சரமாரியாக அடித்து உதைத்ததில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.  

பின்னர் உடலை மேட்டுப்பாளையம் பகுதியில் வீசிவிட்டு தப்பி சென்றுள்ள நிலையில், இருவரும் தொடர் விசாரணைக்கு பின்னர் காவல் துறையினரிடம் சிக்கியுள்ளான். இதுமட்டுமல்லாது இந்த கொலை வழக்கில் தொடர்புடைய திருப்பூர் வெங்கடேசன் உள்ளிட்ட ஐவரை தேடி வருகின்றனர். மேலும், கொலையான சக்திவேலிற்கு சிவப்பிரியா (வயது 15) என்ற மகளும், தர்சன் (வயது 12) என்ற மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in selam Business man murder police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->