சாத்தூர் பட்டாசு ஆலை வெடித்து, 9 பேர் உயிரிழந்த துயரம்.. இழப்பீடு அறிவித்த முதலமைச்சர்.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சிப்பிப்பாறையில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த நிலையில், நேற்று பிற்பகல் 3 மணி அளவில் பட்டாசு ஆலையில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த  வெடிவிபத்தில் ஆலையில் பணிபுரிந்த ஊழியர்களில் 9 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து தீயணைப்பு படையினர் பட்டாசு ஆலையில் பரவியுள்ள தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், பட்டாசு ஆலையின் உரிமையாளர் இழப்பீடு தர வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்தனர். 

மேலும், தற்போது சட்டமன்றம் நடைபெற்று வரும் நிலையில், இவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இழப்பீடு அறிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய நேரத்தில், மேற்கூறிய விபத்து நிகழ்ந்துள்ள நிறுவனம் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்ததாக தெரிவித்தார். 

இந்த விபத்தில் காயமடைந்துள்ள அனைவருக்கும் தேவையான அனைத்து உயர் இரக சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 இலட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Satur firework factory accident peoples died CM announce Compensation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->