சின்னத்தம்பியை போலவே., உணவிற்காக ஊருக்குள் வரும் கரடிகள்.! பதறியோடும் மக்கள்., பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனம்.!!  - Seithipunal
Seithipunal


ரஷியாவில் இருக்கும் வடக்கு பகுதியில் ஆர்டிக் பெருங்கடலானது அமைந்துள்ளது. இந்த பகுதியில் நோவாயா செம்லியா தீவுக்கூட்டமானது இருக்கிறது. இந்த தீவுப்பகுதியில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்தில் பனிக்கரடிகளானது வசித்து வருகின்றன. 

அங்கு நிலவும் அதிக பனியின் காரணமாக கடல் வாழ் உயிரினமான மீன்கள் அங்கிருந்து வேறு இடங்களுக்கு சென்றுவிட்டன. இதன் காரணமாக மீன்களை பிடித்து உண்ணும் பணிகரடிகள் உணவுகள் கிடைக்காமல் தவித்து வந்தன. 

ஒரு சமயத்திற்கு மேல் உணவில்லாமல் வாடி இடம் பெயர கரடிகள் தயாராகி., தற்போது அங்குள்ள ஆர்க்கான்கெலஸ்க் பிராந்தியத்தில் இருக்கும் பெல்ஷியா குபா நகர் பகுதிகளை சுமார் 50 க்கும் மேற்பட்ட பனிக்கரடிகள் வந்துள்ளன. 

பனிக்கரடிகள் மிகவும் ஆபத்தான விலங்குகள் என்பதால்., பொதுமக்களை காக்கும் பொருட்டு அந்த பகுதியில் அவசர கால பிரகடனம் பிறப்பிக்கப்பட்டு., பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த பகுதிகளில் இராணுவ வீரர்கள் களம் இரக்கப்பட்டு மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த செய்தியை காணும் சயமத்தில் உணவிற்க்காகவும்., தண்ணீர்க்காகவும் சின்னத்தம்பி பரிதவிக்கும் நிலையும்., கரடிகள் நிலையும் இதுவாகத்தான் உள்ளது. 

English Summary

in Russia polar bears coming inside form sea to Russia town for food


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal