அத்துமீறலை மீண்டும் தொடர்ந்த இலங்கை கடற்படை.. கைதான மீனவர்கள், கண்ணீரில் குடும்பத்தினர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் பகுதியை சார்ந்த சுமார் 400 க்கும் மேற்பட்ட படகுகளில், 1500 க்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றுள்ளனர். 

இவர்கள் அனைவரும் கச்சத்தீவிற்கு அருகே உள்ள நடுக்கடல் பகுதியில் நேற்று மாலை நேரத்தின் போது மீன்பிடித்து கொண்டு இருந்தனர். இந்த சமயத்தில், அங்கு இலங்கை கடற்படையினர், 3 கண்காணிப்பு கப்பல்களில் வருகை தந்துள்ளனர். 

இவர்கள் இராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியதோடு மட்டுமல்லாது, எல்லைதாண்டி வந்து மீன்பிடித்து கொண்டு இருப்பதாக கூறி ஒரு விசைப்படகு மற்றும் 11 மீனவர்களை கைது செய்துள்ளார். 

மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் இலங்கை நாட்டில் உள்ள காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சம்பவத்தால் இராமேஸ்வரம் மீனவர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் மீனவ அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Rameswaram fishermen arrest by Srilankan navy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->