வறட்சியால் ஊரையே காலி செய்த கிராம மக்கள்..! இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


பணிக்காக சொந்த ஊரை விட்டு வெளியூர் செல்வது தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்ட நிலையில்., இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமமே பிழைப்பிற்க்காக ஊரை காலி செய்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் அருகேயுள்ள உத்தன் கிராமம்., கடந்த 1982 ஆம் வருடத்தில் சுமார் 170 க்கும் மேற்பட்ட குடும்பத்திற்கு அடைக்கலம் அளித்தது. இக்கிராம மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டிருந்த நிலையில்., போதிய மழையின்மை மற்றும் வறட்சியின் காரணமாக கிராமத்தை விட்டு நகரத்திற்கு செல்ல துவங்கியுள்ளனர். 

ஒருவர் பின்னர் ஒருவர் என்று அனைவரும் கிராமத்தை விட்டே வெளியேறி கிராமம் வெறிசோடி காணப்படுகிறது. இக்கிராமத்தின் முகப்பில் இருக்கும் மந்தை மாரியம்மன் கோவிலில் வருடம் தோறும் ஆவணி மாதம் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவிற்கு மட்டும் இக்கிராமத்து மக்கள் வந்து செல்கின்றனர். தற்போது இந்த கிராமம்த்தில் 10 பேர் மட்டுமே வசித்து வருகின்றனர். 

ramnad,

இது குறித்து அப்பகுதி மக்கள்., வறட்சியின் காரணமாக தங்களின் கிராமம் இந்நிலைக்கு வந்துள்ளதாகவும்., தமிழக அரசு கொடுக்கும் அரிசி மற்றும் முதியோர் உதவித்தொகையின் மூலமாக தங்களை காப்பாற்றிக்கொள்ளதாகவும்., தமிழக அரசு அடிப்படை தேவையை செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். 

மேலும்., மக்கள் பிழைப்பிற்க்காக நகரங்கள் மற்றும் பிற மாநிலங்கள்., வெளிநாடுகள் போன்று செல்லும் நிலையில்., விவசாயத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையும் பருவமழையால் பொய்த்துப்போவதால் நகரத்தை நோக்கி இடப்பெயர்ச்சி அடைகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in ramanthapuram village peoples left due to poor condition of village


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->