பழையசோறு பிச்சை எடுக்க சென்றவனுக்கு நெய் சாதம்..! ஏ.டி.எம் பிராடு கும்பலின் பலே கைவரிசை.!! - Seithipunal
Seithipunal


நமது வங்கிக்கணக்கில் நமக்காக கொடுக்கப்பட்ட வங்கிகளின் ரகசிய எண் மற்றும் ஏ.டி.எம் எண்கள் போன்றவற்றை அறிந்து கொண்டு நமது பணத்தை கொள்ளையடித்து செல்லும் கும்பலின் அட்டகாசமானது தொடர்ந்து அதிகரித்து வந்தது. 

மேலும்., இதனை அறிந்த வங்கிகள் இதற்கான விழிப்புணர்வை மக்களுக்கு தொடர்ந்து ஏற்படுத்தி வந்த நிலையில்., வங்கி அதிகாரி போல வாடிக்கையாளரை தொடர்பு கொண்ட ஆடியோ பதிவுகள் இணையத்தளத்தில் பெரும் வைரலாகி இருந்தது. 

இந்த நிலையில்., இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பஜார் காவல்நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது அலைபேசி எண்ணிற்கு கடந்த மாதம் 9 ஆம் தேதியன்று மர்ம அழைப்பு வந்துள்ளது.

atm, atm fraud, atm model card,

மறுமுனையில் பேசிய நபர் வங்கி அதிகாரியை போலவே பாவனையேற்றி., ஏ.டி.எம் அட்டையினை புதுப்பிக்க வேண்டும் என்றும் கூறி அவரது ரகசிய குறியீட்டு எண் மற்றும் 16 இலக்க எண் போன்றவற்றை கேட்கவே., காவல்துறை அதிகாரியும் அனைத்தையும் கொடுத்துள்ளார். 

"பழையசோறு பிச்சை எடுக்க சென்றவனுக்கு., நெய் சாதம் கிடைத்தார் போல" முதல் தவணையாக ரூ.39,980 மற்றும் அடுத்த தவணையாக இரண்டு நாட்களுக்குள் ரூ.99,968 வரை எடுக்கப்பட்டுள்ளது.

Complaint,

இதனால் பதறிப்போன அதிகாரி தான் பணியாற்றி வந்த காவல் நிலையத்திலேயே புகாரளித்த நிலையில்., எந்த விதமான முன்னேற்றமும் இல்லாததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து இது தொடர்பான வழக்குப்பதிவு நேற்று செய்யப்பட்டது. 

மக்களிடம் கொள்ளை கும்பல் பல விதமான முயற்சியில் கொள்ளையில் ஈடுபட்டு வரும் நிலையில்., மக்களுக்காக பல விழிப்புணர்வுகளை வங்கியுடன் சேர்ந்து காவல் துறையினரும் செய்து வருகின்றனர். இந்த நிலைமையில்., காவல்துறை அதிகாரியே பணத்தை இழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in ramanathapuram ATM fraud stolen money from police officer


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->