புதுக்கோட்டை வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு நிறைவு.. 58 மாடுபிடி வீரர்கள் காயம்.!! - Seithipunal
Seithipunal


தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு பொங்கல் பண்டிகையின் போது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவது இயல்பான ஒன்றாகும். கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக ஜல்லிக்கட்டை தடை செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 

தடைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டு ஜல்லிக்கட்டு இன்று மக்களுக்காக, தமிழர்களுக்காக ஜல்லிக்கட்டுபோட்டிகள் மீண்டும் நடைபெற்று வருகிறது. இதற்க்காக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பிற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்காக ஏற்பாடுகள் பலமாக நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் காலை சுமார் 8 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி, மாலை 4.30 மணிவரை போட்டிகள் நடைபெற்றது. 

இந்த போட்டியில் 700 காளைகள் மற்றும் 730 வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிகட்டுப்போட்டி நடைபெறும் இடங்களில் அமரும் மாடம், அலங்கார வளைவு, ஒலிபெருக்கி, சிசிடிவி கண்காணிப்பு காமிராக்கள், மருத்துவ முகாம்கள் மற்றும் பாதுகாப்பு வேலிகள் போன்றவை அமைக்கப்பட்டு உள்ளது. 

நேற்று மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு காலை துவங்கியது. இந்த போட்டியில் சுமார் 700 காளைகளும், 923 வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் 1500 காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இறுதியில் சுமார் ஒருமணிநேரம் அதிகரிக்கப்பட்டு மாலை 5 மணிக்கு ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது.

இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. காலையில் துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 700 வீரர்கள், 800 காளைகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியில் சிறந்த வீரர் மற்றும் சிறந்த காளையாக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தமிழக முதலமைச்சரின் சார்பாக கார் பரிசாக வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வசம் இரண்டு காளைகள் இருந்த நிலையில், இரண்டு காளைகளும் மாடுபிடி வீரர்களை சுழட்டி எறிந்த சம்பவம் அங்குள்ள ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை எழுப்பியது.

காளைகளை அவிழ்த்து விடுவது தொடர்பான பிரச்சனையில் தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய காவல் துறையினர் தடியடி நடத்தி பதற்றத்தை தனித்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. பின்னர் எப்போதும் போல போட்டிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அங்குள்ள சோழவந்தான் பகுதியை சார்ந்த ஸ்ரீதர் என்ற வாலிபர் காளை மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த போட்டியில் கலந்துகொண்ட 23 மாடுபிடி வீரர்கள் காளைகள் முட்டியதில் காயமடைந்துள்ளதாகவும், சுமார் 10 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதனைப்போன்று ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போன்றவை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சில நேரத்தில் எதிர்பாராத உயிரிழப்புகளும் நடைபெற்று வருகிறது. திருச்சியில் உள்ள மணப்பாறையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாட்டின் உரிமையாளர் மாடுமுட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப்போன்று 50 க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். இதனைப்போன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு தற்போது நிறைவு பெற்றுள்ளது. இந்த போட்டியின் போது சுமார் 58 பேர் மாடு முட்டியதில் படுகாயமடைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in puthukottai vanniyan viduthi jalikat 58 peoples injured


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->