பேருந்தில் செல்ல வழியின்றி தவித்த 5 மாணவிகள்.. உதவி செய்த அதிகாரிகள்.. நெகிழ்ச்சி சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


இந்திய நாட்டில் கரோனா வைரஸிற்கு 562 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸின் அதிதீவிர பரவும் தன்மையின் காரணமாக வரும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நபர்களில் பூரண நலன் பெற்று 41 பேர் இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர். 

519 இந்தியர்களுக்கும், 43 வெளிநாட்டினருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் 21 நாட்களுக்கு கரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நேற்று மாலை 6 மணிமுதலாகவே தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அரசு பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் நேற்று நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில், மதுரை மற்றும் காரைக்குடி செல்வதற்கு பரிதவித்து நின்ற பயணிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் வாடகை வேன் ஏற்பாடு செய்து கொடுத்து, அதிகளவு வாடகை வாங்க கூடாது என்று கூறி அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளார். 

இதனையடுத்து அருண்சக்தி அங்கிருந்து புறப்பட்டு சென்ற நிலையில், அரைமணிநேரம் கழித்து 5 கல்லூரி மாணவிகள் சீர்காழி செல்வதற்கு வழி தெரியாமல் பரிதவித்து நின்றுள்ளனர். இதனை கவனித்த நகராட்சி பொறுப்பு ஆணையர் சுப்பிரமணியன் மாணவிகளிடம் சென்று விசாரித்துள்ளனர். இதனையடுத்து நிலையை புரிந்துகொண்டு, மாணவிகள் செல்வதற்கு கார் ஏற்பாடு செய்து, பாதுகாப்பாக சொந்த செலவு ரூ.4 ஆயிரத்தில் அனுப்பி வைத்துள்ளார்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in puthukottai curfew govt officers help girl students and passengers


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->